8TH TAMIL அணி இலக்கணம்

8TH TAMIL அணி இலக்கணம்

8TH TAMIL அணி இலக்கணம்

8TH TAMIL அணி இலக்கணம்

  • செய்யுளுக்கு அழகு தருவன அணிகள் ஆகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பிறிது மொழிதல் அணி என்றால் என்ன

  • உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
  • பிறிது மொழிதல் அணியில் “உவமை” மட்டுமே இடம்பெறும்.
8TH TAMIL அணி இலக்கணம்
8TH TAMIL அணி இலக்கணம்
  • எ.கா:
    • கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து
  • இத்திருக்குறள், “நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறுகிறது.
  • இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்;
  • தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
  • எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.

வேற்றுமை அணி என்றால் என்ன

  • இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
8TH TAMIL அணி இலக்கணம்
8TH TAMIL அணி இலக்கணம்
  • எ.கா:
    • தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
  • இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது.
  • பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்;
  • உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது.
  • எனவே இது வேற்றுமை அணி ஆகும்.

இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன

  • ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும்.
  • இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.
  • எ.கா:

ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே

தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்

தேங்காயும் நாயும்நேர் செப்பு

  • இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.
  • தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.
  • நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்; சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது.
  • இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.

 

Leave a Reply