7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்
7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்
- மனிதர்கள் புதிய புதிய இடங்களைக் காண்பதில் விருப்பம் உடையவர்கள்
- பழமையான நினைவுச் சின்னங்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள், வழிபாட்டு இடங்கள், கடற்கரைப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
- தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
- இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.
- தலைசிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்ட ஆண்டு = கி.பி. (பொ.ஆ.) 1981.
- ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
- வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது “தமிழ்நாடு” எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது.
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கம் = இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்தல்.
- தமிழ்ப் பல்கலைக்க்காகதில் உள்ள புலங்கள் = ஐந்து. அவை,
- கலைப்புலம்
- சுவடிப்புலம்
- வளர்தமிழ்ப்புலம்
- மொழிப்புலம்
- அறிவியல்புலம்
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ளன.
- இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப்பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்குகிறது.
உ வே சா நூலகம் சென்னை
- உ.வே.சா நூலகம் துவக்கப்பட்ட ஆண்டு = கி.பி. (பொ.ஆ.) 1942.
- உ.வே.சா நூலகத்தில் 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
- 7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்
கீழ்த்திசை நூலகம் – சென்னை
- சென்னை கீழ்த்திசை நூலகம் துவங்கப்பட்ட ஆண்டு = கி.பி. (பொ.ஆ.) 1869.
- இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன.
- இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது.
கன்னிமாரா நூலகம் சென்னை
- சென்னை கன்னிமாரா நூலகம் துவங்கப்பட்ட ஆண்டு = கி.பி. (பொ.ஆ.) 1896.
- தமிழ்நாட்டின் மைய நூலகம் = கன்னிமாரா நூலகம்.
- இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்று = கன்னிமாரா நூலகம்.
- இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
- இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது.
- இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.
- 7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்
வள்ளுவர் கோட்டம் சென்னை
- வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்ட ஆண்டு = கி.பி.(பொ.ஆ.) 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன.
- இது திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
- அடிப்பகுதி = 25 அடி அகலமும், 25 அடி நீளமும் கொண்டது.
- தேரின் மொத்த உயரம் 128 அடி.
- தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற அமைக்கப்பட்டுள்ளது.
- வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன.
- அறத்துப்பால் கருநிறப் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
- பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
- இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
- திருவள்ளுவர் சிலை கட்டப்பட்ட ஆண்டு = கி.பி.(பொ.ஆ.) 1990ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக 2000ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்துவைக்கப்பட்டது.
- திருவள்ளுவர் சிலையின் உயரம் = 133 அடி.
- பீடத்தின் உயரம் = 38 அடி (அறத்துப்பாலின் அதிகாரங்களை குறிக்கிறது).
- சிலையின் உயரம் = 95 அடி (பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களை குறிக்கிறது)
- பீடத்தின் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது.
- மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள குறள்களின் எண்ணிக்கை = அதிகாரத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் 133 (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்)
- சிலை அமைக்க மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- 7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை
- மதுரையில் உலகத் தமிழச் சங்கம் கட்டப்பட்ட ஆண்டு = கி.பி. (பொ.ஆ.) 2016.
- கி.பி. (பொ.ஆ.) 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக்கட்டடத்தில் இயங்கி வருகிறது.
- தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
- தொல்காப்பியர், ஒளவையார், கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார்.
- பூம்புகார் நகரைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ள நூல் = சிலப்பதிகாரம், பட்டினப்பாலை.
- இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
- பின்னர் ஏற்பட்ட கடல்கோளினால் பூம்புகார் நகரம் அழிந்துவிட்டது.
- இந்நகரத்தின் பெருமையை உலகறியச் செய்ய கி.பி.(பொ.ஆ.) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
- இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது.
- கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
- மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.
- நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.
- 7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு