7TH TAMIL அழியாச் செல்வம்

7TH TAMIL அழியாச் செல்வம்

7TH TAMIL அழியாச் செல்வம்

7TH TAMIL அழியாச் செல்வம்

  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர்.
  • அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ, அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வம் = கல்வியே

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாடல்

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற.

–    சமண முனிவர்

7TH TAMIL அழியாச் செல்வம்
7TH TAMIL அழியாச் செல்வம்

அருஞ்சொற்பொருள்

  • வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
  • கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
  • வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும்
  • விச்சை – கல்வி
  • வவ்வார் – கவர முடியாது
  • எச்சம் – செல்வம்

பாடலின் பொருள்

  • கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது.
  • ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
  • மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.
  • ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.
  • மற்றவை செல்வம் ஆகா.

நாலடியார் நூல் குறிப்பு

  • நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  • இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
  • இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
  • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
  • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

 

 

 

 

Leave a Reply