7TH TAMIL கலங்கரை விளக்கம்

7TH TAMIL கலங்கரை விளக்கம்

7TH TAMIL கலங்கரை விளக்கம்

7TH TAMIL கலங்கரை விளக்கம்

  • கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று
  • கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர்.
  • கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பெரும்பாணாற்றுப்படை பாடல்

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை

–    கடியலூர் உருத்திரங் கண்ணனார்

அருஞ்சொற்பொருள்

  • மதலை = தூண்
  • ஞெகிழி = தீச்சுடர்
  • அழுவம் = கடல்
  • சென்னி = உச்சி
  • உரவுநீர் = பெருநீர்ப் பரப்பு
  • கரையும் = அழைக்கும்
  • வேயா மாடம் = வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்.
7TH TAMIL கலங்கரை விளக்கம்
7TH TAMIL கலங்கரை விளக்கம்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆசிரியர் குறிப்பு

  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
  • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
  • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
  • இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.

ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன

  • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

பத்துப்பாட்டு நூல்கள் யாவை

  1. திருமுருகாற்றுப்படை
  2. பொருநராற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. சிறுபாணாற்றுப்படை
  5. முல்லைப்பாட்டு
  6. மதுரைக்காஞ்சி
  7. நெடுநல்வாடை
  8. குறிஞ்சிப்பாட்டு
  9. பட்டினப்பாலை
  10. மலைபடுகடாம்.

 

 

7TH TAMIL

 

 

Leave a Reply