7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

Table of Contents

7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

  • பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு.
  • பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும்.
  • நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இருவகைப்படுத்தலாம்
  • வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே!
  • கப்பல் கட்டுவதும் கப்பலைச் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகள் ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

முந்நீர் வழக்கம்

  • நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
  • அந்நூல் “முந்நீர் வழக்கம்” என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது.

திருக்குறளும் கப்பலும்

  • “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ருகிறார் திருவள்ளுவர்.
  • திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதை இக்குறள் காட்டுகிறது.
7TH TAMIL தமிழரின் கப்பற்கலை
7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

பூம்புகாரில் ஏற்றுமதியும் இறக்குமதியும்

  • பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதைப் பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.
  • பூம்புகார் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பற்றிய செய்திகளை கூறும் நூல் = பட்டினப்பாலை.

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்

  • “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்ற அடி இடம்பெற்ற நூல் = அகநானூறு.
  • பெரிய கப்பலை “வங்கம்” என்று குறிப்பிடும் நூல் = அகநானூறு.

பெருங்கலி வங்கம்

  • “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = பதிற்றுப்பத்து.
  • பெரிய கப்பலை “வங்கம்” என்று குறிப்பிடும் நூல் = பதிற்றுப்பத்து.
  • பெரிய கப்பலை “வங்கம்” என்று குறிப்பிடும் நூல்கள் = அகநானூறு, பதிற்றுப்பத்து.

சேந்தன் திவாகரம்

  • சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
  • பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நூல் = சேந்தன் திவாகரம்.

கட்டுமரம், தோணி

  • மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி அவற்றின் மீது ஏறிப் பயணம் செய்வது = கட்டுமரங்கள்.
  • எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டு பயணம் செய்வது = தோணி.
  • உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.

சிறிய கப்பல் பெரிய கப்பல்கள்

  • சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்பட்டவை = தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்
  • கடல் பயணம் செல்லும் அளவில் பெரிய கப்பல்கள் = கலம், வங்கம், நாவாய்.

கலஞ்செய் கம்மியர்

  • கப்பல் கட்டும் கலைஞர்கள் “கம்மியர்” என்று அழைக்கப்பட்டனர்
  • “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = மணிமேகலை.
7TH TAMIL தமிழரின் கப்பற்கலை
7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

மரங்களை தேர்வுசெய்தல்

  • நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களைப் பயன்படுத்தினர்.
  • பக்கங்களுக்குத் தேக்கு, வெண்தேக்கு போன்ற மரங்களைப் பயன்படுத்தினர்.
  • மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை வெட்டுவாய் என்பர்.
  • அதன் (வெட்டுவாய்) நிறத்தைக் கொண்டு மரத்தின் தன்மையை அறிவர்.

கண்ணடை என்றால் என்ன

  • கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.
  • கப்பல்களில் செதுக்கப்படும் உருவங்கள் = கண்ணடை.
  • மேலும் சுழி உள்ள மரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்தனர்.

தச்சுமுழம் என்றால் என்ன

  • கப்பலின் நீளம், உயரம், அகலம் ஆகியவற்றை கணக்கிட “தச்சுமுழம்” என்ற நீட்டலளவை முறையை கையாண்டனர் தமிழர்கள்.
  • நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்கினர். இவற்றைத் தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர்.

கரிமுக அம்பி, பரிமுக அம்பி

  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு.
  • கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்றெல்லாம் இவை அழைக்கப்பட்டன.

மார்க்கோபோலோ

  • சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர்.
  • இதனால் கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன.
  • இம்முறையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்னும் கடற்பயணி வியந்து பாராட்டியுள்ளார்.

மர ஆணிகள்

  • தொகுதி = இரும்பு ஆணிகள் துருப்பிடித்துவிடும் என்பதால் மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர். இந்த ஆணிகளைத் தொகுதி என்பர்.

பாய்மரக் கப்பல்கள்

  • காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன.
  • பாய்மரக் கப்பல் வகைகள் = பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம்
  • பாய்மரக் கப்பல் கயிறுகள் = ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, மூட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு

பாய்மர பழுதை பற்றி கூறும் பரிபாடல்

  • பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது.
7TH TAMIL தமிழரின் கப்பற்கலை
7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

கப்பலின் உறுப்புகள்

  • கப்பலின் உறுப்புகள் = எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்.
    • எரா = கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம்.
    • பருமல் = குறுக்கு மரத்தைப் பருமல் என்பர்.
    • சுக்கான் = கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி
    • நங்கூரம் = கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு.

கப்பல் சாத்திரம் நூல்

  • சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
  • இது காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கப்பல் செலுத்துபவர் பெயர்கள்

  • கப்பல் செலுத்துபவரை மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி முதலிய பல பெயர்களால் அழைப்பர்.

கப்பலைச் செலுத்தும் முறை

  • “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = புறநானூறு.
  • “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” என்ற அடிகளை பாடியவர் = வெண்ணிக்குயத்தியார்.
  • காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதனை தனது பாடல் மூலம் வெண்ணிக்குயத்தியார் வெளிப்படுத்தி உள்ளார்.

கலங்கரை விளக்கம் பொருள்

  • கலம் என்பதன் பொருள் = கப்பல்.
  • கரைதல் என்பதன் பொருள் = அழைத்தல்.
  • கலங்கரை விளக்கம் என்றால் = “கப்பலை அழைக்கும் விளக்கு” என்று பொருள்.

கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து

  • கடற்கரைக்கு அருகே வரமுடியாத பெரிய கப்பல்களில் இருந்து பொருட்களை “தோணி” மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தியை “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது.
  • “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.

வெலிங்டன் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு மணி

7TH TAMIL தமிழரின் கப்பற்கலை
7TH TAMIL தமிழரின் கப்பற்கலை
  • நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
  • தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
  • பிற்காலச் சோழர்களில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதை வரலாறு பகர்கிறது.

தமிழர் கட்டிய கப்பல்கள்

  • வாக்கர் = “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்.

ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திய தமிழர்கள்

  • கடல் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன.
  • அவை செல்லும் வழியைச் செயற்கைக்கோள்கள் மூலம் தற்போது ஆராய்ந்துள்ளனர்.
  • அவ்வழியில் உள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.
  • எனவே பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது.

 

 

Leave a Reply