7TH TAMIL வழக்கு

7TH TAMIL வழக்கு

7TH TAMIL வழக்கு

7TH TAMIL வழக்கு

  • எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்
  • நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

வழக்கு எத்தனை வகைப்படும்

  • வழக்கு இரண்டு வகைப்படும். அவை,
    • இயல்பு வழக்கு
    • தகுதி வழக்கு

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இயல்பு வழக்கு என்றால் என்ன

  • ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்

  • இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவை,
    • இலக்கணமுடையது
    • இலக்கணப்போலி
    • மரூஉ

தகுதி வழக்கு என்றால் என்ன

  • ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.

தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்

  • தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை,

இயல்பு வழக்கு தகுதி வழக்கு

இயல்பு வழக்கு

தகுதி வழக்கு

ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
மூன்று வகை = இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ

மூன்று வகை = இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

இலக்கணமுடையது என்றால் என்ன

  • இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்
  • எ.கா:
    • நிலம், மரம், வான், எழுது
  • இவை தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன.

இலக்கணப்போலி என்றால் என்ன

  • இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
  • இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும்.

சொற்கள் முன்பின் இடம் மாறி வருவது = இலக்கணப்போலி

  • எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
  • எ.கா:
    • புறநகர் (நகர்ப்புறம்)
    • கால்வாய் (வாய்க்கால்)
    • தசை (சதை)
    • கடைக்கண்
    • இல்முன் (முன்றில்)
    • கிளைநுனி (நுனிக்கிளை)
    • வாயில் (இல்வாய்)

மரூஉ என்றால் என்ன

  • இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
  • எ.கா:
    • தஞ்சை (தஞ்சாவூர்)
    • நெல்லை (திருநெல்வேலி)
    • குடந்தை (கும்பகோணம்)
    • எந்தை (என் தந்தை)
    • போது
    • சோணாடு

வாயில் வாசல்

7TH TAMIL வழக்கு
7TH TAMIL வழக்கு
  • வாயில் = இலக்கணப்போலி
  • வாசல் = மரூஉ
    • இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும்.
    • வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.

இடக்கரடக்கல் என்றால் என்ன

  • பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
  • எ.கா:
    • கால் கழுவி வந்தேன்.
    • குழந்தை வெளியே போய்விட்டது.
    • ஒன்றுக்குப் போய் வந்தேன்.

மங்கலம் என்றால் என்ன

  • மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
  • எ.கா:
    • செத்தார் = துஞ்சினார், இயற்கை எய்தினார்
    • ஓலை = திருமுகம்
    • கறுப்பு ஆடு = வெள்ளாடு
    • விளக்கை அணை = விளக்கைக் குளிரவை
    • சுடுகாடு = நன்காடு

குழூஉக்குறி என்றால் என்ன

  • பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர்.
  • இவ்வாறு ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
  • எ.கா:
    • பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
    • ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

7TH TAMIL வழக்கு
7TH TAMIL வழக்கு
  • இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.
    • நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் = இடக்கரடக்கல்
    • மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் = மங்கலம்
    • பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் = குழூஉக்குறி

போலி என்றால் என்ன

  • சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.
  • போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.
  • எ.கா:
    • அறம் செய விரும்பு- இஃது ஒளவையார் வாக்கு.
    • அறன் வலியுறுத்தல் என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று.
  • இத்தொடர்களில் அறம், அறன் ஆகிய சொற்களில் ஓர் எழுத்து மாறியுள்ளது. ஆனால் பொருள் மாறுபடவில்லை.

போலி எத்தனை வகைப்படும்

  • போலி மூன்று வகைப்படும். அவை,
    • முதற்போலி
    • இடைப்போலி
    • கடைப்போலி

முதற்போலி என்றால் என்ன

  • சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.
  • எ.கா:
    • பசல் – பைசல்
    • மஞ்சு – மைஞ்சு
    • மயல் – மையல்

இடைப்போலி என்றால் என்ன

  • சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.
  • எ.கா:
    • அமச்சு – அமைச்சு
    • இலஞ்சி – இலைஞ்சி
    • அரயர் – அரையர்

கடைப்போலி என்றால் என்ன

  • சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும்.
  • எ.கா:
    • அகம் – அகன்
    • நிலம் – நிலன்
    • முகம் – முகன்
    • பந்தல் – பந்தர்
    • சாம்பல் – சாம்பர்
  • கடைப்போலி குறிப்புகள்
    • அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும்.
    • லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்

முற்றுப்போலி என்றால் என்ன

  • ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
  • எ.கா:
    • ஐந்து – அஞ்சு
  • இதில் அஞ்சு என்னும் சொல் ஐந்து என்னும் சொல்லின் போலி வடிவமாகும்.
  • அஞ்சு என்ற சொல்லில் உள்ள எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டு இருந்தாலும் அஃது ஐந்து என்னும் பொருளையே தருகிறது.

 

 

 

7TH TAMIL

 

Leave a Reply