7TH TAMIL தொழிற்பெயர்

7TH TAMIL தொழிற்பெயர்

7TH TAMIL தொழிற்பெயர்

7TH TAMIL தொழிற்பெயர்

  • ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.
  • தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது
  • படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
  • எ.கா:
    • உழவர் செய்யும் தொழில் உழுதல்.
    • தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்.
  • இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன.
  • எ.கா:
    • படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்

  • தொழிற்பெயர் மூன்று வகைப்படும். அவை,
    • விகுதி பெற்ற தொழிற்பெயர்
    • முதனிலைத் தொழிற்பெயர்
    • முதனிலை திரிந்த தொழிற்பெயர்
7TH TAMIL தொழிற்பெயர்
7TH TAMIL தொழிற்பெயர்

விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன

  • வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
  • எ.கா:
    • நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை
  • இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.

தொழிற்பெயர் விகுதிகள் யாவை

  • தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை

  • எ.கா:
    • தருதல் – தல்
    • கூறல் – அல்
    • ஆட்டம் – அம்
    • விலை – ஐ வருகைகை
    • பார்வை – வை
    • நட்பு – பு
    • மறைவு – வு
    • மறதி – தி
    • கல்வி – வி
    • உணர்ச்சி – சி
    • செய்யாமை – மை
    • போக்கு – கு

முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன

  • எ.கா:
    • வானில் இடி இடித்தது
    • சோறு கொதி வந்தது
  • இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும்.
  • இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.
  • முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.

முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன

  • எ.கா:
    • தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
    • உணவின் சூடு குறையவில்லை.
  • இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
  • பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன.
  • இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
  • (எ.கா.) விடு – வீடு, மின் – மீன், கொள் – கோள், உடன்படு – உடன்பாடு

 

 

Leave a Reply