7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்

7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்

7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்

7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்

  • ஒர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது = சொல் எனப்படும்.
  • சொல்லின் வேறு பெயர்கள் = பதம், கிளவி, மொழி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்

  • இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவை,
    • பெயர்ச்சொல்
    • வினைச்சொல்
    • இடைச்சொல்
    • உரிச்சொல்

இலக்கிய வகை சொற்கள் எத்தனை வகைப்படும்

  • இலக்கிய வகை சொற்கள் நான்கு வகைப்படும். அவை,
    • இயற்சொல்
    • திரிசொல்
    • திசைச்சொல்
    • வடசொல்
7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்
7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்

இயற்சொல் என்றால் என்ன

  • எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
  • எ.கா:
    • கடல், கப்பல், எழுதினான், படித்தான்.
  • இவற்றின் பொருள் இயல்பாகவே எளிதில் விளங்குகிறது.

இயற்சொல் எத்தனை வகைப்படும்

  • இயற்சொல் நான்கு வகைப்படும். அவை,
    • பெயர் இயற்சொல் = மண், பொன்
    • வினை இயற்சொல் = நடந்தான், வந்தான்
    • இடை இயற்சொல் = அவனை, அவனால்
    • உரி இயற்சொல் = மாநகர்

திரிசொல் என்றால் என்ன

  • கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
  • எ.கா:
    • வங்கூழ் = காற்று
    • அழுவம் = கடல்
    • சாற்றினான் = சொன்னான்
    • உறுபயன் = மிகுந்த பயன்

திரிசொல் எத்தனை வகைப்படும்

  • சொற்கள் வகையில் திரிசொல் நான்கு வகைப்படும். அவை,
    • பெயர்த் திரிசொல் = அழுவம், வங்கம்
    • வினைத் திரிசொல் = இயம்பினான், பயின்றாள்
    • இடைத் திரிசொல் = அன்ன, மான
    • உரித் திரிசொல் = கூர், கழி
  • பொருள் வகையில் திரிசொல் இரண்டு வகைப்படும். அவை,
    • ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்
      • வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.
    • பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
      • இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண் இமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.
7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்
7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்

திசைச்சொல் என்றால் என்ன

  • வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
  • எ.கா:
    • சாவி, சன்னல், பண்டிகை, இரயில்
  • முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

வடசொல் என்றால் என்ன

  • வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
  • எ.கா:
    • வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்
  • இச்சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும்.

வடசொல் எத்தனை வகைப்படும்

  • வடசொல் இரண்டு வகைப்படும். அவை,
    • தற்சமம்
    • தற்பவம்

தற்சமம் என்றால் என்ன

  • கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.

தற்பவம் என்றால் என்ன

  • லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்.

 

 

 

 

Leave a Reply