7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

  • தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி.
  • தமிழ்மொழி பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டு கூறுகளைக் கொண்டது.
  • இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு. வேற்றுமையும் உண்டு

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மொழி என்பது யாது

  • தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும்.
  • மொழியின் மூலமாகவே மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஒலிக் குறியீடுகள்

  • மொழிகள் பல தோன்றக் காரணமாக இருந்தது = ஒலிக் குறியீடுகள்.
  • ஒலியின் வரிவடிவம் “எழுத்து” ஆகும்.
7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

பேச்சுமொழி

  • வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும்.
  • மொழியின் முதல் நிலை எனப்படுவது = பேசுவதும் கேட்பதும்.

எழுத்துமொழி

  • கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்து மொழியாகும்.
  • மொழியின் இரண்டாம் நிலை எனப்படுவது = எழுதப்படுவதும் படிக்கப்படுவதும்.

பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

  • ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி = உடனடி பயன்பாட்டிற்கு உரியது.
  • வரி வடிவில் அமையும் எழுத்து மொழியானது = நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரியது.

தமிழ்மொழி

  • தமிழ் மொழியில் பேச்சு, எழுத்து ஆகிய இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.

பேச்சுமொழி

  • மொழியின் உயிர்நாடியாக விளங்குவது = பேச்சுமொழி.
  • உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தவது = பேச்சுமொழி.
  • கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டது = பேச்சுமொழி.
  • பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள் = பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம்.

பேச்சுமொழியில் பொருள் வேறுபாடு

  • பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சு மொழியின் பொருள் வேறுபடும்.
  • “கவனி” என்னும் சொல்லின் பொருள்கள் = பேணுதல், கவனித்துச் செல்.
  • ஒரு தொடரில் எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்பப் பேச்சுமொழியில் பொருளும் வேறுபடும்.
  • சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை, நன்னூல் நூற்பா விளக்குகிறது.
7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்”

–    நன்னூல்

  • “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நன்னூல்.

வட்டார மொழி என்றால் என்ன

  • பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
  • மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடுவது = வட்டாரமொழி.
  • இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை “வட்டார மொழி” என்பர்.

கிளைமொழி என்றால் என்ன

  • ஒரே மொழியை பேசும் மக்களில், வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் ஆகியவற்றின் காரணமாக பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும்.
  • மக்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது, மாற்றங்கள் ஏற்பட்டு புதிய மொழிகள் உருவாகும்.
  • இவ்வாறு உருவாகும் புதிய மொழிகளை “கிளை மொழி” என்பர்.

எழுத்துமொழி

  • பேச்சுமொழியின் வரிவடிவமே = எழுத்துமொழி.
  • ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு இன்றியமையாதது = எழுத்துமொழி.
  • காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப எழுத்துமொழி சிதைவதில்லை. ஆனால் வரிவடிவம் மாறுபடும்.

பேச்சுமொழி எழுத்துமொழி வேறுபாடுகள்

பேச்சுமொழி

எழுத்துமொழி

பேச்சுமொழி “உலக வழக்கு” எனப்படும்

எழுத்துமொழி “இலக்கிய வழக்கு” எனப்படும்
சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும்

சொற்கள் முழுமையாக எழுதப்படும்

உணர்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும்

உணர்சிக் கூறுகள் குறைவாக இருக்கும்
உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் காரணமாக கருத்தை எளிமையாக உணர்த்த முடியும்

உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு இடமில்லை.

சிந்தித்தலுக்கு நேரம் குறைவு

சிந்தித்து எழுத முடியும்
பிழைகளை திருத்திக்கொள்ள வைப்பு இல்லை

திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு

இலக்கிய நடையில் அமைவதில்லை

இலக்கிய நடையில் அமையும்
விரைந்து மாற்றமடையும் மொழி

பெரும்பாலும் மாறுவதில்லை

பிறமொழிச் சொற்கள் கலப்பு அதிகம்

பிறமொழிச் சொற்கள் கலப்பு குறைவு
மொழித் தூய்மை குறைவு

மொழித் தூய்மை அதிகம்

இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன

  • பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.
  • தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது.
  • தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

இரட்டை வழக்கு மொழி

  • தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.
  • தமிழ் மொழியை “இரட்டை வழக்கு மொழி” என்பர்.

மொழி பற்றி மு.வ கூற்று

  • மு.வ = ‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு.
  • மு.வ = எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’.

குழந்தைகளுக்குத் தாய்மொழி

  • கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.
  • மொழியின் முதல்நிலை = கேட்டல், பேசுதல்.
  • படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.
  • மொழியின் இரண்டாம் நிலை = படித்தல், எழுதுதல்.

 

 

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *