8TH TAMIL ஓடை

8TH TAMIL ஓடை
- மனித வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது.
- கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனதை மயக்க வல்லவை.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- தூண்டுதல் = ஆர்வம் கொள்ளுதல்
- ஈரம் = இரக்கம்
- முழவு = இசைக்கருவி
- நன்செய் = நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன்செய் = குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
- பயிலுதல் = படித்தல்
- நாணம் = வெட்கம்
- செஞ்சொல் = திருந்திய சொல்
- வள்ளைப்பாட்டு = நெல் குத்தும் பொழுது பாடப்படும் பாட்டு

வாணிதாசன் ஆசிரியர் குறிப்பு
- தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படும் கவிஞர் வாணிதாசன்.
- அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும்.
- இவர் பாரதிதாசனின் மாணவர்.
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
- கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர்.
- இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
- தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.
8TH TAMIL