9TH TAMIL குறுந்தொகை
9TH TAMIL குறுந்தொகை
- ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனிதம் பேசிய சங்கக் கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்வன.
- அவற்றுள் ஒன்றான குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்;
- அதன் சிறப்புக் கருதியே ‘நல்ல குறுந்தொகை’ என்று அழைக்கப்படுகிறது;
- குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக் காட்டுவன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- நசை = விருப்பம்
- நல்கல் = வழங்குதல்
- பிடி = பெண்யானை
- வேழம் = ஆண்யானை
- யா = ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
- பொளிக்கும் = உரிக்கும்
- ஆறு = வழி
இலக்கணக்குறிப்பு
- களைஇய = சொல்லிசை அளபெடை
- பெருங்கை, மென்சினை = பண்புத் தொகைகள்
- பொளிக்கும் = செய்யும் என்னும் வினைமுற்று
- பிடிபசி = ஆறாம் வேற்றுமைத் தொகை
- அன்பின = பலவின்பால் அஃறிணை வினைமுற்று
குறுந்தொகை நூல் குறிப்பு
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
- இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது
- கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.
- இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை.
- 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
- நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் ஆகும்.
- இப்பாடலின் ஆசிரியர் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
- இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்;
- கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப் பெற்றார்.
- திருக்குறள்
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி