9TH TAMIL சீவக சிந்தாமணி
9TH TAMIL சீவக சிந்தாமணி
- நிகழ்வுகளின் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தவை = சங்க இலக்கியங்கள்.
- அறக் கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் = பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
- ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவதாக அமைந்தவை = காப்பியங்கள்.
- சீவகனைத் தலைவனாக கொண்டு உருவான காப்பியம் = சீவக சிந்தாமணி.
- சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்து = இன்பங்களைத் துறந்து துறவு பூனை வேண்டும்.
- சீவகனின் நாடு = ஏமாங்கத நாடு.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாடல் பொருள்
- தென்னை மரத்தில் இருந்து விழுந்த முற்றிய காய், பாக்கு மரத்தில் உச்சில் உள்ள தேனடையை கிழித்து, பின்பு பலாப் பலத்தினை பிளந்து, மாங்கனியை சிதற வைத்து, பின்பு வாழைப் பழத்தை உதிர்க்க செய்தது.
- வாரி வழங்கும் செல்வந்தர்களைப் போன்றது = வெள்ளம்.
- புள்ளிகளும் வரிகளும் உடைய மீன் = வரால் மீன்கள்.
- நெற்பயிர்களின் தோற்றமானது = பச்சைப் பாம்பு போல் இருந்தது.
- நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது = செல்வம் பெற்ற பக்குவம் இல்லாதவர் தலை நிமிர்ந்து நிற்பது போல் உள்ளது.
- முற்றிய நெற்பயிர்கள் சாய்ந்து நிற்பது = தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.
- “தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்ந்தவே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சீவக சிந்தாமணி.
- ஏமாங்கத நாட்டில் நாள்தோறும் கிடைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை = ஆயிரம்.
- மகளிர் ஒப்பனை செய்து கொள்ளும் மணிமாடங்கள் = ஆயிரம்.
- ஏமாங்கத நாடு யாருக்கு இனிய இடமாகும் = உண்மையான தவம் புரிவோர்க்கும், இல்லறம் நடத்துவோருக்கும்/
அருஞ்சொற்பொருள்
- தெங்கு = தேங்காய்
- இசை = புகழ்
- வருக்கை = பலாப்பழம்
- நெற்றி = உச்சி
- மால்வரை = பெரிய மலை
- மடுத்து = பாய்ந்து
- கொழுநிதி = திரண்ட நிதி
- மருப்பு = கொம்பு
- வெறி = மணம்
- கழனி = வயல்
- செறி = சிறந்த
- இரிய = ஓட
- சூல் = கரு
- அடிசில் = சோறு
- மடிவு = சோம்பல்
- கொடியனார் = மகளிர்
- நற்றவம் = பெருந்தவம்
- வட்டம் = எல்லை
- வெற்றம் = வெற்றி
இலக்கணக்குறிப்பு
- நற்றவம் = பண்புத்தொகை
- செய்கோலம் = வினைத்தொகை
- தேமாங்கனி (தேன் போன்ற மாங்கனி) = உவமைத்தொகை
- இறைஞ்சி = வினையெச்சம்
- கொடியனார் = இடைக்குறை
சீவக சிந்தாமணி நூல் குறிப்பு
- சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும்.
- விருதப்பாவால் இயற்றப்பட்ட தமிழின் முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி.
- ‘இலம்பகம்’ என்ற உட்பிரிவுகளைக் கொண்டது.
- 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது இந்நூல்.
- சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை = 13.
- ‘மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது இந்நூல்.
- “மணநூல் என அழைக்கப்படும் நூல் = சீவக சிந்தாமணி.
- நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது.
- இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
- சமண சமயத்தைச் சார்ந்த இவர், இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்றமுடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.
- இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.
- சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘நரிவிருத்தம்’ என்னும் நூலை இயற்றினார் என்பர்.
- “நரிவிருத்தம்” என்னும் நூலை இயற்றியவர் = திருத்தக்கதேவர்.
சீவகசிந்தாமணி இலம்பகங்கள்
- நாமகள் இலம்பகம்
- கோவிந்தையார் இலம்பகம்
- காந்தருவதத்தையார் இலம்பகம்
- குணமாலையார் இலம்பகம்
- பதுமையார் இலம்பகம்
- கேமசரியார் இலம்பகம்
- கனகமாலையார் இலம்பகம்
- விமலையார் இலம்பகம்
- சுரமஞ்சியார் இலம்பகம்
- மண்மகள் இலம்பகம்
- பூமகள் இலம்பகம்
- இலக்கணையார் இலம்பகம்
- முத்தி இலம்பகம்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி