9TH TAMIL தாவோ தே ஜிங்
9TH TAMIL தாவோ தே ஜிங்
- இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளுக்குள் உள்ளடங்கியது வாழ்க்கை.
- ஒன்றைப் பிடித்த பிடியை விட்டுப் பிறிதொன்றை எட்டிப் பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்க்கையின் உருவத்தை வரைந்து வைத்து விடுகின்றன.
- உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாகக் கருதுவதைச் சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தத்துவ விளக்கம்
- இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது.
- குடம் செய்ய மண் என்பது உண்டு.
- குடத்திற்குள்ளே வெற்றிடம் என்பது இல்லை.
- இந்த உண்டும் இல்லையும் சேர்வதால்தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும்.
- வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது.
- இவை முரண்களாகத் தெரிந்தாலும் இவை முரண்களல்ல.
- அதை வலியுறுத்தவே இன்மையால்தான் நாம் பயனடைகிறோம் என்கிறார் கவிஞர்.
- ஆரங்களைவிட நடுவிலுள்ள வெற்றிடம் சக்கரம் சுழல உதவுகிறது.
- குடத்து ஓட்டினைவிட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது.
- சுவர்களைவிட வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது.
- ஆகவே, ‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது அவர் கருத்து.
இலக்கணக்குறிப்பு
- பாண்டம் பாண்டமாக = அடுக்குத்தொடர்
- வாயிலும் சன்னலும் = எண்ணும்மை
லாவோட்சு ஆசிரியர் குறிப்பு
- லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றண்டிற்கு முன் வாழ்ந்தவர்.
- சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர்.
- அக்காலம், சீனச் சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
- லாவோட்சு “தாவோயியம்” என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர்.
- ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
- லாவோட்சுவோ இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார்.
- தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது.
- இப்பாடலை தமிழில் மொழி பெயர்த்தவர் = சி.மணி.
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி