9TH TAMIL யாப்பிலக்கணம்

9TH TAMIL யாப்பிலக்கணம்

9TH TAMIL யாப்பிலக்கணம்

9TH TAMIL யாப்பிலக்கணம்

  • கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் = யாப்பிலக்கணம்.
  • பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுவது = யாப்பிலக்கணம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

யாப்பின் உறுப்புகள் எத்தனை

  • யாப்பின் உறுப்புகள் எத்தனை = ஆறு.
  • அவை,
    • எழுத்து
    • அசை
    • சீர்
    • தளை
    • அடி
    • தொடை

எழுத்துகள் எத்தனை வகைப்படும்

  • எழுத்துகள் எத்தனை வகைப்படும் = மூன்று.
  • யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படும்.

அசை என்பது யாது

  • எழுத்துகளால் ஆனது ‘அசை’ எனப்படும்.
  • ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும்.

அசை எத்தனை வகைப்படும்

  • அசை எத்தனை வகைப்படும் = இரண்டு.
  • இது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

நேரசை என்பது யாது

  • தனிக்குறில் = ப
  • தனிக்குறில், ஒற்று = பல்
  • தனிநெடில் = பா
  • தனிநெடில், ஒற்று = பால்

நிரையசை என்பது யாது

  • இரு குறில் = அணி
  • இரு குறில், ஒற்று = அணில்
  • குறில், நெடில் = விழா
  • குறில், நெடில், ஒற்று = விழார்

சீர் என்றால் என்ன

  • ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை சீர் ஆகும்.
  • இதுவே பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமையும்.
  • பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது = சீர்.
  • ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் எனச் சீர்கள் நான்கு வகைப்படும். அவை:
    • நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது உண்டு.
    • அதனை நேர்பு என்னும் அசையாகக் கொள்வர்.
    • நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடியும் அசைகள் நிரைபு என்று கூறப்படும்.
    • இவை வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக் கொள்ளப்படும்.
  • ஈரசைச் சீர்களுக்கு, ‘இயற்சீர்’, ‘ஆசிரிய உரிச்சீர்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஓரசைச்சீர்

9TH TAMIL யாப்பிலக்கணம்
9TH TAMIL யாப்பிலக்கணம்
  • நேர் = நாள்
  • நிரை = மலர்
  • நேர்பு = காசு
  • நிரைபு = பிறப்பு

ஈரசைச் சீர்

9TH TAMIL யாப்பிலக்கணம்
9TH TAMIL யாப்பிலக்கணம்

அசை

வாய்ப்பாடு
நேர் நேர் தேமா

மாச்சீர்

நிரை நேர்

புளிமா
நிரை நிரை கருவிளம்

விளச்சீர்

நேர் நிரை

கூவிளம்

மூவசைச்சீர்

9TH TAMIL யாப்பிலக்கணம்
9TH TAMIL யாப்பிலக்கணம்

காய்ச்சீர்

கனிச்சீர்
அசை வாய்ப்பாடு அசை

வாய்ப்பாடு

நேர் நேர் நேர்

தேமாங்காய் நேர் நேர் நிரை தேமாங்கனி
நிரை நேர் நேர் புளிமாங்காய் நிரை நேர் நிரை

புளிமாங்கனி

நிரை நிரை நேர்

கருவிளங்காய் நிரை நிரை நிரை கருவிளங்கனி
நேர் நிரை நேர் கூவிளங்காய் நேர் நிரை நிரை

கூவிளங்கனி

வெண்சீர்கள்

  • காய்ச்சீர்களை “வெண்சீர்கள்” என்றும் அழைப்பர்.
  • மூவசைச் சீர்களை அடுத்து நேரசையா அல்லது நிரையசையோ சேர்கின்ற பொழுது “நாலசைச்சீர்” தோன்றும்.

தளை என்றால் என்ன

  • பாடலில், நின்ற சீரின் ஈற்றசையும், அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் ‘தளை ‘எனப்படும்.
  • இது ஒன்றியும் ஒன்றாமலும் வரும்.

தளை எத்தனை வகைப்படும்

  • தளை எத்தனை வகைப்படும் = ஏழு வகை.
  • தளை ஏழு வகைப்படும். அவை,
    • நேரொன்றாசிரியத்தளை = மா முன் நேர்
    • நிரையொன்றாசிரியத்தளை = விளம் முன் நிரை
    • இயற்சீர் வெண்டளை = மா முன் நிரை, விளம் முன் நேர்
    • வெண்சீர் வெண்டளை = காய் முன் நேர்
    • கலித்தளை = காய் முன் நிரை
    • ஒன்றிய வஞ்சித்தளை = கனி முன் நிரை
    • ஒன்றா வஞ்சித்தளை = கனி முன் நேர்

அடி என்றால் என்ன

  • இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது’ அடி’ எனப்படும்.

அடி எத்தனை வகைப்படும்

  • அடி எத்தனை வகைப்படும் = ஐந்து வகை
  • அடி ஐந்து வகைப்படும். அவை,
    • இரண்டு சீர்களைக் கொண்டது = குறளடி.
    • மூன்று சீர்களைக் கொண்டது = சிந்தடி.
    • நான்கு சீர்களைக் கொண்டது = அளவடி.
    • ஐந்து சீர்களைக் கொண்டது = நெடிலடி.
    • ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது = கழிநெடிலடி.

தொடை என்றால் என்ன

  • தொடை என்றால் “தொடுத்தல்”.
  • பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துக்கள் ஒன்றிவரத் தொடுப்பது “தொடை” எனப்படும்.
  • தொடை என்னும் செய்யுள் உறுப்பு, பாடலில் உள்ள அடிகள்தோறும் அல்லது சீர்கள்தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.

தொடை எத்தனை வகைப்படும்

  • தொடை எத்தனை வகைப்படும் = எட்டு வகை.
  • தொடை எட்டு வகைப்படும். அவை,
    • மோனை
    • எதுகை
    • இயைபு
    • முரண்
    • அளபெடை
    • இரட்டை
    • அந்தாதி
    • செந்தொடை

மோனைத் தொடை என்றால் என்ன

  • ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது மோனைத் தொடை எனப்படும்.

எதுகைத் தொடை என்றால் என்ன

  • அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது எதுகைத் தொடை எனப்படும்.

இயைபுத் தொடை என்றால் என்ன

  • அடிகள்தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது இயைபுத் தொடை எனப்படும்.

 

Leave a Reply