9TH TAMIL விரிவாகும் ஆளுமை
9TH TAMIL விரிவாகும் ஆளுமை
- தமிழியல் ஆய்வு வளரக் காரணமாக இருந்த தமிழறிஞர் பலர்.
- பேராசிரியர் தனிநாயகம் அவர்கள் இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கினார்.
- தமிழின் பரப்பையும் சிறப்பையும் உலகின் பல நாடுகளில் பரவலாக்கினார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தனிநாயகம் அடிகளார்
- மனிதனுக்கு தேவையான ஆளுமை பற்றி இவர் ஆற்றிய பிரபலாமன் உரை நடைபெற்ற இடம் = இலங்கை யாழ் பல்கலைக்கழகம்.
- இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய “பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு”, மிகவும் புகழ் பெற்றது ஆகும்.
- பரந்த ஆளுமையும் (personality) மனித நலக் கோட்பாடும் (humanism) பற்றி இலத்தீன் புலவர் தெறென்ஸ் (Terence) கூறிய கூற்றானது – “நான் மனிதன்: மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்றார்.
முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள்
- முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்கிறார் கோர்டன் ஆல்போர்ட் (Gordon Allport) என்னும் உளநூல் வல்லுநர்.
- தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவன்
- பிறர் கணிப்பதை அறிந்துககொள்ளும் ஆற்றல்
- தன் வாழ்க்கைக்கு தேவையான தத்துவத்தை கடைபிடித்து நடத்தல்.
பூட்கையில்லோன் யாக்கை போல
- குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் “பூட்கையில்லோன் யாக்கை போல” (புறம். 69) என்னும் அடியில் புலவர் ஆலத்தூர்கிழார் நிலைநாட்டுகிறார்.
உலகமேதை ஆல்பெர்ட் சுவைட்சர்
- ஒழுக்கவியலை (Ethics) நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர், திருக்குறளைப் பற்றிக் கூறும்போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்பார்.
- ஆனால், இத்தகைய கொள்கைகள் திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன.
பாணரும் புலவரும்
- தமிழ் இலக்கியத்தை ஆராயும்போது, பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன்முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் தமிழ்நாட்டுப் பாணரும் புலவருமே ஆவர் என்பதை அறிய முடிகிறது.
- பாணர்க்கும் புலவர்க்கும் சொந்த ஊரும் நாடும் உண்டு.
- ஆயினும், அவர்கள் தமிழ் வழங்கும் இடமெங்கும் சென்று அரசர்களையும் வள்ளல்களையும் மக்களையும் வாழ்த்தி வந்ததால் ‘தமிழகம்’ என்ற ஒற்றுமை உணர்வு உண்டானது.
- அம்மொழி பரவிய நிலம் அனைத்தையும் “தமிழகம்” என்றும் “தமிழ்நாடு” என்றும் வாழ்த்தினர்.
மொழிபெயர் தேயம்
- பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது “மொழிமாறும் நாடு” – “மொழிபெயர் தேயம்” என்றே வரையறுத்துக் கூறியுள்ளனர்.
அகத்திணை இலக்கியம்
- அகத்திணை இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனப்பான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.
- ஐவகை நிலங்களின் பெரும்பொழுது, சிறுபொழுது, கருப்பொருள் ஆகியவற்றைப் புலவரும் பாணரும் இலக்கியம் பயில்வோரும் தவறாது கற்றுவந்தனர்.
படுதிரை வையம் பாத்திய பண்பே
- தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்தமுறை உலகின் பிரிவாகவே அமைந்தது.
படுதிரை வையம் பாத்திய பண்பே – (தொல்.948) |
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
- கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் என்பவரைப் போற்றுவதற்குக் காரணம் அவர், நன்மையை நன்மைக்காகவே செய்ததுதான்.
- பிறர் போற்றுவார்கள் என்றோ வேறு நலன்களைப் பெறலாம் என்றோ அவர் நன்மைகளைச் செய்யவில்லை.
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் – புறம். 134 (அடி 1 − 2 ) |
வட இந்தியாவுடன் தொடர்புகள்
- “இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
- “இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
திருக்குறளில் பூட்கைமகன்
- திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் பல கூறப்பட்டிருக்கின்றன.
- ஒன்று பிறர்பால் அன்புடைமை ஆகும். இல்லற வாழ்க்கையின் நோக்கம் ஈகை, விருந்தோம்பல் போன்ற பண்புகளால் ஆளுமையை வளர்த்தல் ஆகும்.
உரோமையருடைய “சாப்பியன்ஸ்” அல்லது சான்றோன்
- தமிழ் மக்கள் “சான்றோன்” எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் “sapens” (அறிவுடையோன்) எனப்படும் இலட்சிய புருஷனைப் போற்றி வந்தனர்.
தத்துவ ஞானி செனக்கா
- செனக்கா என்னும் தத்துவ ஞானி கூறியதாவது: “எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்”.
மார்க்ஸ் அரேலியஸ்
- மார்க்ஸ் அரேலியஸ் என்னும் பேரரசர் கூறியதாவது: “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்”.
உலகப் புலவர் திருவள்ளுவர்
- மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் திருக்குறள். ஜி.யு. போப் திருவள்ளுவரை “உலகப் புலவர்” என்று போற்றுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.
- திருவள்ளுவரை “உலகப் புலவர்” எனப் போற்றியவர் = ஜி.யு.போப்.
தனிநாயகம் அடிகள் ஆசிரியர் குறிப்பு
- தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
- அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.
- இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம்பெற்றுள்ளது.
- தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார்.
- அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார்.
- இவர் தொடங்கிய “தமிழ்ப் பண்பாடு” என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
உலகத் தமிழ் மாநாடுகள்
வ. எண் |
மாநாடு | ஆண்டு | நடைபெற்ற நாடு | இடம் |
1 | முதல் மாநாடு | 1966 | மலேசியா |
கோலாலம்பூர் |
2 |
இரண்டாவது மாநாடு | 1968 | இந்தியா | சென்னை |
3 | மூன்றாவது மாநாடு | 1970 | பிரான்ஸ் |
பாரிஸ் |
4 |
நான்காவது மாநாடு | 1974 | இலங்கை | யாழ்பாணம் |
5 | ஐந்தாவது மாநாடு | 1981 | இந்தியா |
மதுரை |
6 |
ஆறாவது மாநாடு | 1987 | மலேசியா | கோலாலம்பூர் |
7 | ஏழாவது மாநாடு | 1989 | மொரிசியஸ் |
மொரிசியஸ் |
8 |
எட்டாவது மாநாடு | 1995 | இந்தியா | தஞ்சாவூர் |
9 | செம்மொழி மாநாடு | 2010 | இந்தியா |
கோயம்புத்தூர் |
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- 9TH TAMIL விரிவாகும் ஆளுமை
- 9TH TAMIL விரிவாகும் ஆளுமை
- 9TH TAMIL விரிவாகும் ஆளுமை
- 9TH TAMIL விரிவாகும் ஆளுமை
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி