9TH TAMIL குறுந்தொகை

9TH TAMIL குறுந்தொகை

9TH TAMIL குறுந்தொகை

9TH TAMIL குறுந்தொகை

  • ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனிதம் பேசிய சங்கக் கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்வன.
  • அவற்றுள் ஒன்றான குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்;
  • அதன் சிறப்புக் கருதியே ‘நல்ல குறுந்தொகை’ என்று அழைக்கப்படுகிறது;
  • குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக் காட்டுவன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • நசை = விருப்பம்
  • நல்கல் = வழங்குதல்
  • பிடி = பெண்யானை
  • வேழம் = ஆண்யானை
  • யா = ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
  • பொளிக்கும் = உரிக்கும்
  • ஆறு = வழி

இலக்கணக்குறிப்பு

  • களைஇய = சொல்லிசை அளபெடை
  • பெருங்கை, மென்சினை = பண்புத் தொகைகள்
  • பொளிக்கும் = செய்யும் என்னும் வினைமுற்று
  • பிடிபசி = ஆறாம் வேற்றுமைத் தொகை
  • அன்பின = பலவின்பால் அஃறிணை வினைமுற்று
9TH TAMIL குறுந்தொகை
9TH TAMIL குறுந்தொகை

குறுந்தொகை நூல் குறிப்பு

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
  • இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.
  • இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை.
  • 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
  • நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் ஆகும்.
  • இப்பாடலின் ஆசிரியர் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

  • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்;
  • கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப் பெற்றார்.

 

 

Leave a Reply