9TH TAMIL சந்தை
9TH TAMIL சந்தை
- வண்டிப் பட்டைகளின் தொடர்ந்த தாளக்கட்டோடு, இழுத்துச் செல்கிற மாடுகளின் கழுத்துமணி ஓசையோடு சந்தைக்குப் பொருள் கொண்டுபோவதும் பொருள் வாங்கிவருவதுமான மகிழ்ச்சி பெருநகரங்களில் தொலைந்துவிட்டது.
- இருப்பினும், இன்றும் சில இடங்களில் சந்தை மரபு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
- பல்பொருள் அங்காடிகளின் வருகை, வணிகருக்கும் மக்களுக்குமான உறவைக் குறைத்து வருகிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கதை
- பெரியவர் = தணிகாசலம்
- ஊர் = பூஞ்சோலை கிராமம்
- பெரியவரின் பெயரன் = மூர்த்தி (ஒன்பதாம் வகுப்பு)
- பெரியவரின் பெயர்த்தி = கீர்த்தனா (நான்காம் வகுப்பு)
- மூர்த்தி, கீர்த்தனாவின் ஊர் = புதுச்சேரி
நாளங்காடி அல்லங்காடி
- “ஷாப்பிங் மால்” என்பதன் தமிழ்ச்சொல் = பல்லங்காடி.
- நாளங்காடி = பகலில் செயல்படும் கடைவீதி கடைகள்
- அல்லங்காடி = இரவில் செயல்படும் கடைவீதி கடைகள்.
சந்தை என்பது யாது
- கிராமத்து மக்கள் தங்களோட நிலத்தில் விளையும் காய்கறி, கீரை, தானியம் போன்ற பொருள்களை விற்கவும் தேவையான மாற்றுப் பொருள்களை வாங்கவும் விரும்பி “முச்சந்தி, நாற்சந்தின்னு” மக்கள் கூடும் இடங்களில் கடை விரிச்சாங்க.
- இது தான் சந்தை எனப்படும் பொது வணிக இடமாக மாறியது.
கிராமச் சந்தையின் அடிப்படை
- கிராமச் சந்தையின் அடிப்படை = கலப்படம் இல்லாத நேர்மை.
- கிராமச் சந்தையின் நோக்கம் = மக்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்தல்.
கிராமச் சந்தை
- உள்ளூர்த் தேவைக்கு ஏற்ற மாதிரி, அங்க விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கிற சிறு வணிகச் செயல்பாடு தான் = கிராமச் சந்தை.
கால்நடைச் சந்தை
- மக்கள் நாகரிகம் “குறிஞ்சி” நிலத்தில் வேரூன்றி, “முல்லை” நிலத்தில் வளர்ந்து, “மருத” நிலத்தில் முழுமையும் வளமையும் அடைந்தது.
- உழவுத் தொழிலில் மக்களுக்கு பக்க பலமாக இருந்தவை கால்நடைகள்.
- கால்நடைகளின் தேவை அதிகமாகி அதனை வாங்கவும், விற்கவும் தேவை ஏற்பட்டது அதனால் கால்நடை சந்தை உருவாகியது.
மாட்டுத்தாவணி
- மதுரை அருகே மாட்டு சந்தையை “மாட்டுத்தாவணி” என்று கூறுவர்.
- “தாவணி” என்பதன் பொருள் = சந்தை.
பிரபலமான சந்தைகள்
- மணப்பாறை = மாட்டுச்சந்தை
- அய்யலூர் = ஆட்டுச் சந்தை
- நாகர்கோவில் தோவாளை = பூச்சந்தை
- ஈரோடு = ஜவுளிச் சந்தை
- கடலூர் காராமணி குப்பம் = கருவாட்டுச் சந்தை
- நாகப்பட்டினம் = மீன் சந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தை
- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிச் சந்தை 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுகிறது.
- பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தக்காளி முதல் தங்கம் வரை வாங்குவதற்குக் கூடுகிறார்கள்.
- விற்பவரும் வாங்குபவரும் உறவுகளாய்ப் பேசி மகிழும் ஆரவாரம் அங்கே ஒலிக்கிறது.
- 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது.
- கலப்படமில்லாத பொருள்களை வருவாய் நோக்கின்றி அச்சந்தை இன்றும் விற்பனை செய்கிறது.
பாடலாசிரியர் மருதகாசி
பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு – செல்லக்கண்ணு நீயும் வித்துப்போட்டுப் பணத்த எண்ணு செல்லக்கண்ணு. – பாடலாசிரியர் மருதகாசி |
மாலை நேர சந்தைகள்
- இன்றைக்கும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், வாரச் சந்தைகளும் மாதச் சந்தைகளும் குறிப்பிட்ட சில பொருள்களை மட்டும் விற்கும் சந்தைகளும் மாலை நேரச் சந்தைகளும் நடந்தவண்ணம் உள்ளன.
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி