19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் = திரைப்படம
1895 இல் லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் 1896ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.
சென்னையில் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் இக்காட்சி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன.
திரையரங்கு
1900இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர்.
1905இல் திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமாட்டோ கிராப்’ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனத் தைத் தொடங்கினார்.
தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்’ இதுவே.
அதன் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸைக் கட்டிப் பல படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.
1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இதுவே.
மௌனப்படம்
டுபாண்ட் என்பவர் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றைவிளக்கும் கதைப்படத்தைக் கொண்டு வந்து பம்பாயில் காட்டினார். அந்தப் படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை ‘ என்பதாகும்.
இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் = ‘ஏசுவின் வாழ்க்கை’
தாதாசாகேப் பால்கே தயாரித்து வெளியிட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்னும் மௌனப்படமே இந்தியர் ஒருவர் தயாரித்து வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.
நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவி, 1916இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.
பேசும் படங்கள்
1926இல் ‘வார்னர்’ சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு முதன் முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு வெளிவந்த படம் ‘டோன்ஜுன்’.
அதன்பின் உரையாடலையும் பாடல்களையும் கொண்டு உலகில் முதல் பேசும்படான ‘தி ஜாஸ் சிங்கர் (The Jazz Singer) வெளிவந்தது.
இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931 இல் அர்தேஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸும்’ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது.
அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது.
இதுவே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.
1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது. இதில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும்படம் “சீனிவாசக் கல்யாணம்” ஆகும்.
சீர்திருத்த படங்கள்
1935 ஆம் ஆண்டு முதல் சீர்திருத்த கதைகளை கொண்ட படங்கள் வெளிவந்தன.
“கௌசல்யா” என்ற திரைப்படம் இக்கதையமைப்பில் வெளிவந்த முதல் படமாக அறியப்படுகிறது.
அடுத்து வடுவூர் துரைசாமியின் மேனகா, காசி விஸ்வநாதரின் டம்பாச்சாரி விலாசம் ஆகிய படங்கள் இவ்வகையில் வெளிவந்தன.