TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 11/08/2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 11/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 11/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் (SIDBI) ‘டிஜிட்டல் பிரயாஸ்’ தளம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • “சிட்பி” எனப்படும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி சார்பில் “டிஜிட்டல் பிரயாஸ்” என்ற புதிய செயல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது / Small Industries Development Bank of India (SIDBI) has unveiled ‘Digital Prayaas’ an app-based digital-lending platform to facilitate loans to entrepreneurs from low-income groups.
  • இதன் நோக்கம், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு டிஜிடல் செயலி மூலம் “டிஜிட்டல்-கடன் வழங்கும்” திட்டத்தினை செயல்படுத்துதல்
  • விண்ணப்பித்த அன்றே கடன் வழங்குவதே இதன் முக்கிய குறிக்கோள்

புதிய உலகளாவிய இளைஞர் மேம்பாட்டு குறியீடு

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகத்தால் வெளியிடப்பட்ட 181 நாடுகளில் உள்ள இளைஞர்களின் நிலையை அளவிடும் புதிய உலகளாவிய இளைஞர் மேம்பாட்டு அட்டவணை 2020 இல் இந்தியா 122 வது இடத்தை பிடித்துள்ளது / India is ranked 122nd on a new Global Youth Development Index 2020 measuring the condition of young people across 181 countries, released by the Commonwealth Secretariat in London.
  • இக்குறியீட்டில் முதல் இடத்தில “சிங்கப்பூர்” உள்ளது. அடுத்த இடத்தில் ஸ்லோவேனியா, நோர்வே, மால்டா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இக்குறியீட்டில் இறுதியில் உள்ள நாடுகள் = சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் உள்ளன

வன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 7 தேசிய விருதுகளை வென்ற நாகாலாந்து

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் முதல் முறையாக வழங்கப்படும் “வன் தன்” ஆண்டு விருதில், நாகாலாந்து மாநிலம் 7 தேசிய விருதுகளை வென்றது
  • பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED – Tribal Cooperative Marketing Development Federation of India Limited) 34 வது நிறுவன தின கொண்டாட்டத்தின் போது இவ்விருது வழங்கப்பட்டது

வங்கி மோசடி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக நீரஜ் சோப்ராவை நியமித்துள்ள ரிசர்வ வங்கி

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிஜிட்டல் வங்கி மோசடிகளுக்கு எதிராக மக்களை எச்சரிக்க ஒரு பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது / RBI appoints Neeraj Chopra for banking fraud awareness campaign
  • ரிசர்வ் வங்கி ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை இந்த ப்[உதிய பிரசார இயக்கத்தின் முகமாக நியமனம் செய்துள்ளது

2060க்குள் கார்பன் நடுநிலை நாடாக மாற சீனா இலக்கு

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சீனாவில் ஏற்படுத்தப்பட்ட மிகவேகமான தொழில்மயமாக்கல் நடவடிக்கையின் காரணமாக, அந்நாடு உலகின் மிகப்பெரிய கார்பன் உமிழ்ப்பான் நாடாக உருவெடுத்துள்ளது
  • இதனை மாற்றும் விதமாக, 2060க்குள் கார்பன் நடுநிலை நாடாக மாற சீனா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கார்பன் நடுநிலை என்பது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை முடிந்தவரை பெரிய அளவில் குறைப்பது மற்றும் அகற்ற முடியாததை ஈடுசெய்வது. நிலக்கரிக்குப் பதிலாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களை மேற்கொள்வதாகும்.

முதல் “அல்-மொகத் அல்-ஹிந்தி” கடல்சார் பயிற்சி

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியா மற்றும் சவூதி அரேபியா நாடுகளின் கடல்படை இணைந்து மேற்கொள்ளும் “முதல் அல்-மொகத் அல்-ஹிந்தி” கடற்படை போர் பயிற்சி நிகழ்ச்சி விரைவில், சவூதி அரேபியாவின் ஜூவில் துறைமுக கடற்பகுதியில் நடைபெற உள்ளது / India and Saudi Indian is all set to conduct their first ever naval exercise called “AL-MOHED AL-HINDI 2021”.
  • இப்பயிற்சி கலந்துக் கொள்ள ஏதுவாக இந்தியாவின் “ஐ.என்.எஸ் கொச்சி” ஏவுகணை தாங்கி கப்பல், சவூதி அரேபியா சென்றடைந்தது
  • கூட்டு கடற்படை பயிற்சி இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும்.

தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டின் போது ஒழுக்கமின்மை நடவடிக்கையின் காரணமாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் (WFI) தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளார் / Vinesh Phogal temporarily suspended by Wrestling Federation of India for indiscipline
  • இந்திய மல்யுத்த சம்மேளனம் வினேஷுக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக தற்காலிகத் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ப்ராஜெக்ட் சிங்கம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ப்ராஜெக்ட் சிங்கம், கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இது புராஜெக்ட் யானை மற்றும் புராஜெக்ட் புலி மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக, குஜராத் மாநில அரசு, மத்திய அரசிடம் இருந்து 2000 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளது

தேசிய மருந்து விலை ஆணையத்தின் புதிய தலைவர்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • தேசிய மருந்து விலை ஆணையத்தின் புதிய தலைவராக, ஐ.ஏ.எஸ் அதிகாரியான “கமலேஷ் குமார் பந்த்” நியமனம் செய்யப்பட்டுள்ளார் / Kamlesh Kumar Pant appointed new NPPA (National Pharmaceutical Pricing Authority) chairman
  • மருந்து விலை நிறுவனத்திற்கு தற்போது ஐஏஎஸ் அதிகாரி சுப்ரா சிங், ராஜஸ்தான் மாநிலப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நகர்ப்புறத்தில் வன வள உரிமைகளை அங்கீகரித்த இந்தியாவின் முதல் மாநிலம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • நகர்ப்புறத்தில் வன வள உரிமைகளை அங்கீகரித்த இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது சத்தீஸ்கர் / Chhattisgarh becomes 1st state to recognise Forest Resource Rights in Urban Region
  • அம்மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ளடக்கிய 4,127 ஹெக்டேர் காடுகளில் வசிப்பவர்களின் உரிமைகளை மாநில அரசு அங்கீகரித்து.

உயரமான போக்குவரத்து விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்தை அமைக்கும் இந்திய விமானப்படை

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) உலகின் மிக உயரமான போக்குவரத்து விமானக் கட்டுப்பாடு (ஏடிசி) கோபுரங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளது / Indian Air Force (IAF) has constructed one of the world’s tallest transportable air traffic control (ATC) towers
  • லடாக்கின் நியோமாவில் உள்ள மேம்பட்ட தரையிறங்கும் மைதானத்தில் இந்திய விமானப்படை (IAF) உலகின் மிக உயர்ந்த மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளது
  • கிழக்கு லடாக் பகுதியில் செயல்படும் நிலையான விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளை ஏடிசி கட்டுப்படுத்துகிறது.

முதல் முறையாக டிஜிட்டல் முறையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது
  • இதற்காக பிரத்தியோகமான மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 3786 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

யுனிசெப் அமைப்பின் வழக்கறிஞராக ஆயுஷ்மான் குரானா நியமனம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா சமீபத்தில் யுனிசெப்பின் பிரபல வழக்கறிஞராக அவர்களின் உலகளாவிய பிரச்சாரமான EVAC (குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல்) க்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் / Bollywood actor Ayushmann Khurrana was recently appointed as Unicef’s Celebrity Advocate for their global campaign EVAC (Ending Violence Against Children)
  • மேலும் அவர் இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆன்லைன் பாதுகாப்பு குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்

பூசா பயோ-சிதைப்பான்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், “பூசா பயோ-சிதைப்பான்”, எனப்படும் பூசா சிதைவு கருவியை உருவாக்கி உள்ளது. இது அறுவடை முடிந்த பின்பு நிலத்தில் மிச்சமாக இருக்கும் பில்பயிர்களை உரமாக்கும் / Pusa bio-decomposer also known as Pusa Decomposer was developed by ICAR – Indian Agriculture Research Institute, New Delhi.
  • பூசா பயோ-சிதைப்பான் 15 முதல் 20 நாட்களில் பயிர் எச்சத்தை உரமாக மாற்றும், எனவே, குப்பை எரிவதைத் தடுக்கலாம்.
  • இவை நுண்ணுயிரிகளின் கலவையைக் கொண்ட காப்ஸ்யூல்கள் ஆகும், அவை குச்சிகளின் சிதைவு செயல்முறையை விரைவுபடுத்துகின்றன.

பணம் இல்லாத ஏ.டி.எம் நிறுவனங்களுக்கு அபராதம்

  • இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், அணைத்து வங்கிகளுக்கும், தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள ஏ.டி.எம்களில் மாதத்திற்கு 10 மணி நேரத்திற்கு மேல் பணம் இல்லாத ஏ.டி.எம் நிறுவனங்களுக்கு ரூபாய் 1௦௦௦௦ அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது / The RBI (Reserve Bank of India) has announced the launch of the Penalty for non-replenishment of ATMs, as per which it will impose penalties on ATMs that run out of cash.
  • ஒயிட் லேபிள் ஏடிஎம்களின் விஷயத்தில், அந்த நிறுவனத்தின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்தியாவில் முதல் முறையாக காவல் அருங்காட்சியகம்

  • காவல் துறையில் 15௦ ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், தோட்டாக்கள் என நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட அறிய பொருட்கள் அடங்கிய பிரம்மாண்ட காவல் அருங்காட்சியம், சென்னை எழும்பூரில் உருவாகி வருகிறது
  • நாட்டிலேயே முதலாவது பிரம்மாண்ட காவல் துறை அருங்காட்சியகமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது

 

Leave a Reply