TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 17/08/2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 17/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 17/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

எஷ்ஹ.டி.எப்.சி வங்கியின் “பசுமை மற்றும் நிலையான” வைப்புத் தொகை

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி வங்கி, காலநிலை மாற்றத்தில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் “பசுமை மற்றும் நிலையான வைப்புத் தொகை” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
  • இந்த நிலையான வைப்புத்தொகை, பசுமை மற்றும் நிலையான வீட்டு கடன் தீர்வுகள் மற்றும் சேவைகளுக்கு கடனாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது

ஜெயப்ரகாஷ் நாராயண் பற்றிய வாழ்க்கை வரலாறு புத்தகம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய சுதந்திர போராட்ட வீரரான “ஜெயப்ரகாஷ் நாராயணின்” வால்கி வரலாற்றினை அறிந்து கொள்ளும் விதமாக, பிமல் பிரசாத் மற்றும் சுஜாதா பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து “The Dream of Revolution: A Biography of Jayaprakash Narayan” என்ற பெயரில் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளனர்
  • இதுவரை அவரின் வாழ்கையை பற்றி மற்றவர்கள் அறியாத விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது

தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மருத்துவமனை வளாகம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துமனை வளாகத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மருத்துவமனை என்ற சிறப்பை இம்மருத்துவமனை பெற்றுள்ளது
  • எந்த ஒரு அவசரநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் 69-வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் 69-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை, மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரை சேர்ந்த 2௦ வயதான ஹர்சித் ராஜா பெற்றுள்ளார்
  • கிராண்ட்மாஸ்டர் (GM) பட்டம் உலக சதுரங்க அமைப்பான FIDE மூலம் சதுரங்க வீரர்களுக்கு வழங்கப்படுகிறது

19-வது ஸ்பிலிம்பெர்கோ ஓபன் சதுரங்க சாம்பியன்சிப்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இத்தாலியின் ஸ்பிலிம்பெர்கோ நகரில் நடைபெற்ற 19-வது ஸ்பிலிம்பெர்கோ ஓபன் சதுரங்க சாம்பியன்சிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய கிராண்ட் மாஸ்டர் ரவுனக் சத்வாணி, ஹங்கேரியின் ஆடம் கோசக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்
  • மகாராஸ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த இவர், இந்தியாவின் 65-வது கிராண்ட் மாஸ்டர் ஆவார்

உலக சுகாதார நிறுவனத்தின் புதிய “SAGO” குழு

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு புதிய ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ளது. இக்குழுவிற்கு “புதிய வகை நோய்க்கிருமிகளின் தோற்றத்திற்கான சர்வதேச அறிவியல் ஆலோசனைக் குழு” அல்லது SAGO எனப் பெயரிடப்பட்டுள்ளது
  • SAGO = The International Scientific Advisory Group for Origins of Novel Pathogens

மதிய உணவு திட்டத்தில் வலுவூட்டப்பட்ட அரிசி

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ஆகஸ்ட் 15, 2021 அன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், பள்ளிகள், ரேசன் கடைகள் மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசி 2024 க்குள் பலப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
  • இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு நோய்களை குறைக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய இளைஞர் விருது

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அஸாமுக்கு, சிறந்த தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டது.
  • “ஹரிதா ஹரம்” என்ற திட்டத்தின் கீழ் அவர் இரத்த தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் தோட்டத் திட்டங்கள் போன்ற பல்வேறு நல்ல விசயங்களை மேற்கொண்டு செயல் ஆற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிட்ட தமிழக அரசு

  • விவசாய பட்ஜெட் தாக்கல் செய்த இந்தியாவின் 3-வது மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது
  • தேர்தல் வாக்குறுதி படி, பொது பட்ஜெட்டில் இருந்து தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னர் நாட்டில் வேளாண் பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்துள்ள மாநிலங்கள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகும்.

21 வயது உட்பட்டோருக்கான உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • 21 வயது உட்பட்டோருக்கான உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியாவின் கோமலிகா பாரி பெற்றுள்ளார்
  • போலந்தின் வ்ரோக்லாவில் நடைபெற்ற இளைஞர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கோமலிகா பாரி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்
  • இவர் ஏற்கனவே 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக வில்வித்தை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவர் ஆவார்

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர்

  • தாலிபான் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், புதிய அதிபராக தாலிபான் தீவிரவாத குழுக்களின் தலைவர் அப்துல் காணி பராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்று தாலிபான்களால் அந்நாட்டின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட மரபணு வங்கி

  • உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட மரபணு வங்கி, இந்தியாவின் புது தில்லியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
  • தாவர மரபணு வளங்களின் விதைகளை எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பதற்காக இந்த தேசிய மரபணு வங்கி 1996 இல் நிறுவப்பட்டது.

கொரோனோவை கண்டறிய LEAD பரிசோதனை

  • அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கொரோனோ பரிசோதனையை மிகவும் குறைந்த செலவில், விரைவாக கண்டறியும் புதிய “LEAD பரிசோதனை” முறையை உருவாக்கி உள்ளனர்
  • பென்சிலில் பயன்படுத்தப்படும் ஈயத்தில் (LEAD) உள்ள ஒருவகை கிராபைட் இதில் பயன்படுத்தப்படுகிறது
  • LEAD TEST = ELECTROCHEMICAL ADVANCED DIAGNOSTIC TEST
  • ஒன்றரை டாலர் மதிப்பில் இச்சோதனை செய்ய இயலும் என்றும், 6-7 நிமிடங்களில் பரிசோதனை முடிவினை அறிந்துக் கொள்ள இயலும் எனவும் தெரிவித்துள்ளனர்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

  • உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் விராத் கோலி இச்சாதனையை செய்துள்ளார்
  • இதற்கு முன்னர் இம்மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கியோர், கபில் தேவ மற்றும் எம்.எஸ்.தோணி ஆகியோர் ஆவர்

 

Leave a Reply