சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் மனோண்மணீயம்

மனோன்மணீயம்

நூல் குறிப்பு:

 • நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புப் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது இந்நாடகம்.
 • இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
 • எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.
 • அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு.
 • இந்நாடகம் 5 அங்கங்களையும் 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
 • இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:

 • பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர்.
 • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மையார்.
 • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 • இவரின் ஞானாசிரியர் = கோடாக நல்லூர் சுந்தர சுவாமிகள்
 • இவர் இயற்றிய நூல்கள் = நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி.
 • அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
 • இவரது நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.

கதை:

 • மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.
 • அமைச்சர் குடிலன் வஞ்சகம் மிக்கவன்.
 • ஜீவகன் மதுரையை விட்டு திருநெல்வேலியில் கோட்டை அமைத்து அங்கு தங்கினான்.
 • சுந்தர முனிவர் கோட்டையில் தனக்கு ஒரு அறை பெற்று அதில் சுரங்க வழியை அமைத்தார்.
 • ஜீவகனின் மகள் மனோன்மணி. இவள் சேர நாட்டு அரசன் புருடோத்தமனை கனவில் கண்டு காதல் கொள்கிறாள்.
 • அமைச்சன் குடிலனின் மகன் பலதேவனை, சேர அரசனிடம் தூது அனுப்பினான் மன்னன்.
 • பலதேவனின் முறையற்ற பேச்சால் சினம் கொண்ட சேர அரசன் பாண்டிய நாடு மீது போர் தொடுத்தான்.

சொற்பொருள்:

 • செந்தழல் – வேள்வியில் மூட்டுகிற நெருப்பு
 • வானோர் – தேவர்கள்
 • இந்தனம் – விறகு
 • உகம் – யுகம்
 • திருந்தலீர் – பகைவர்கள்
 • செயமாது – வெற்றித் திருமகள்(விசயலட்சுமி)
 • காயம் – உடம்பு

இலக்கணக்குறிப்பு:

 • செந்தழல் – பண்புத்தொகை
 • ஆகுக – வியங்கோள் வினைமுற்று
 • போர்க்குறி – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
 • கனங்கணம் – அடுக்குத்தொடர்

Leave a Comment

Your email address will not be published.