இந்தியக் கவுன்சில் சட்டம் 1861
- இந்திய கவுன்சில் சட்டம் 1861 ஆனது, கல்கத்தாவில் செயல்பட்ட வைசிராயின் நிர்வாகக் குழுவுக்கு பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் அதிகாரம் செலுத்தும் உரிமை வழங்கியது
- 1861 ஜூன் 6-ம் தேதி, இம்மசோதாவை (இந்தியக் கவுன்சில் சட்டம் 1861) இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தவர் = சர் சார்லஸ் வுட் (Sir Charles Wood)
இந்தியக் கவுன்சில் சட்டம் 1861 – அவசியம்
- 1858 இந்திய அரசுச் சட்டத்தில் இந்தியாவில் நிர்வாக அமைப்பு அமைக்கப்படுவது தொடர்பாக எந்த ஒரு உறுதியும் தரப்படவில்லை
- நிர்வாகத்தில் இந்தியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இனி அரசாங்கத்தை பாதுகாப்பது கடினம் என்பதனை உணர்ந்தனர்
- சர் சையது அகமது காண் = இந்தியர்களையும் இந்தியாவின் நிர்வாகத்தில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், இந்தியர்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க மறுத்ததே சிப்பாய் கழகத்திற்கான காரணம் எனவும் குற்றம் சாட்டினார்
இந்தியக் கவுன்சில் சட்டம் 1861 – சிறப்பியல்புகள்
சட்டம் உருவாக்கும் செயலில் இந்தியர்கள்
- இந்திய வைசிராயின் மைய சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், கானிங் பிரபு, அதிகாரிகள் அல்லாத 3 இந்தியர்களை குழுவின் இடம்பெற பரிந்துரை செய்தார். அவர்கள்
- பனாரஸ் அரசர்
- பாட்டியாலாவின் அரசர்
- திவான் சர் தின்கர் ராவ்
- இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்
- இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் “மக்கள் பிரதிநிதித்துவம்” (People Representation) நுழைந்தது
பிற முக்கிய சரத்துக்கள்
- ராணுவம், வருவாய், வெளியுறவு விவகாரம் போன்ற எவ்வித மசோதாக்களும் கவர்னர் ஜெனரலின் கையொப்பம் இன்று செல்லுபடி ஆகாது
- கவர்னர் ஜெனரல் கொண்டுவரும் எந்த ஒரு மசோதாவையும், இந்திய அரசு செயலர் தடுக்கலாம்
இலாக்கா ஒதுக்கீடு முறை
- இந்தியக் கவுன்சில் சட்டம் 1861 படி, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலாக்காக்கள் ஒதுக்கீடு (Portfolio System) செய்யும் அதிகாரம் வைசிராயிக்கு வழங்கப்பட்டது.
- இலாக்காக்கள் ஒதுக்கீடு முறையை (Portfolio System) அறிமுகம் செய்தவர் = கானிங் பிரபு ஆவார்
இட ஒதுக்கீட்டு முறை
- 1861ல் நடைமுறைபடுத்தப்பட்ட மற்றொரு முக்கிய சட்டம், “இந்திய அரசு பணி சட்டம்” ஆகும் (Indian Civil Services Act, 1861)
- இச்சட்டத்தில் அரசுப் பணிகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு ஒப்பந்த அரசுப் பணியாளர்களுக்கு (Covenated Civil Service) ஒதுக்கப்படவேண்டும் என தெரிவித்து, அரசாங்கப் பணிகளில் “இட ஒதுக்கீட்டு முறையை” (Reservation System) அறிமுகம் செய்தது.
அதிகாரப் பரவல்
- “அதிகாரப் பரவல் முறைப்படி” (Decentralised System) மாகாண சட்டமன்றங்களின் அதிகாரங்கள் மீட்டுக் கொடுக்கப்பட்டன.
- 1833ம் ஆண்டு பட்டய சட்டத்தின் படி, மாநில மாகாணங்கள் தாங்கள் இழந்த சட்டம் இயற்றும் அதிகாரத்தை மீண்டும் திரும்ப பெற்றன. தன்படி மதராஸ் மற்றும் பம்பாய் மாகாண கவர்னர்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பெற்றனர்.
புதிய சட்டமன்ற கவுன்சில்
- வங்காளம், வடமேற்கு மாகாணங்கள் (Legislative Council) மற்றும் பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் புதிய சட்டமன்ற கவுன்சிலை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அவசரநிலை பிரகடனம்
- சட்டமன்ற குழுவின் ஒப்புதல் இன்றி, அவசரநிலை ஆணைகள் பிரகடனம் செய்ய வைசிராய்க்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்த அவசரநிலை சட்டத்தின் காலஅளவு = 6 மாதம்
இந்திய உயர்நீதிமன்ற சட்டம்
- 1861ல் அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு முக்கிய சட்டம் “இந்திய உயர்நீதிமன்றங்கள் சட்டம்” (Indian high Courts Act, 1861)
- இச்சட்டத்தின் படி, கல்கத்தா, மதராஸ், பம்பாய் மாகாணங்களுக்கு புதிய உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
குறிப்பு
- இந்தியக் கவுன்சில் சட்டம் 1861 படி மாநில சட்டமன்றங்கள் சட்டம் இயற்றினாலும், படை, நாணயம், சுங்கவரி, வெளியுறவு, தபால், தந்தி ஆகியவை பற்றி எவ்வித சட்டமும் இயற்ற முடியாது.
- மைய சட்டமன்றத்தில் அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட இந்தியர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாக இருந்ததால், ஏழை மக்களின் தேவைகள் ஆங்கில அரசிற்கு கொண்டுசேர்க்கப்படவில்லை.
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)