தொகைச் சொல்லை விரித்தெழுதல்

தொகைச் சொல்லை விரித்தெழுதல்

தொகைச் சொல்லை விரித்தெழுதல்
தொகைச் சொல்லை விரித்தெழுதல்

தொகைச் சொல்லை விரித்தெழுதல்

இருவினை

  • இருவினை = இரண்டு + வினை
  • இருவினை = நல்வினை, தீவினை

இருதிணை

  • இருதிணை = இரண்டு + திணை
  • இருதிணை = உயர்திணை, அஃறிணை

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஈரசை

  • ஈரசை = இரண்டு + அசை
  • ஈரசை = நேரசை, நிரையசை

இருமை

  • இருமை = இரண்டு + மை
  • இருமை = இம்மை, மறுமை

இருசுடர்

  • இருசுடர் = இரண்டு + சுடர்
  • இருசுடர் = சூரியன், சந்திரன்

முப்பால்

  • முப்பால் = மூன்று + பால்
  • முப்பால் = அறம், பொருள், இன்பம்

முத்தமிழ்

  • முத்தமிழ் = மூன்று + தமிழ்
  • முத்தமிழ் = இயல், இசை, நாடகம்

முக்கனி

  • முக்கனி = மூன்று + கனி
  • முக்கனி = மா, பலா, வாழை

முச்சங்கம்

  • முச்சங்கம் = மூன்று + சங்கம்
  • முச்சங்கம் = முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்

முக்கொடி

  • முக்கொடி = மூன்று + கொடி
  • முக்கொடி = வில், புலி, மீன்

முந்நீர்

  • முந்நீர் = மூன்று + நீர்
  • முந்நீர் = மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர்

மும்முரசு

  • மும்முரசு = மூன்று + முரசு
  • மும்முரசு = மணமுரசு, கொடைமுரசு, படைமுரசு

மூவிடம்

  • மூவிடம் = மூன்று + இடம்
  • மூவிடம் = தன்மை, முன்னிலை, படர்க்கை

மூவேந்தர்

  • மூவேந்தர் = மூன்று + வேந்தர்
  • மூவேந்தர் = சேரர், சோழர், பாண்டியர்

நாற்குணம்

  • நாற்குணம் = நான்கு + குணம்
  • நாற்குணம் = அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு

நாற்கரணம்

  • நாற்கரணம் = நான்கு + கரணம்
  • நாற்கரணம் = மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

நாற்றிசை

  • நாற்றிசை = நான்கு + திசை
  • நாற்றிசை = கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

நால்வேதம்

  • நால்வேதம் = நான்கு + வேதம்
  • நால்வேதம் = ரிக், யசூர், சாம, அதர்வண

நானிலம்

  • நானிலம் = நான்கு + நிலம்
  • நானிலம் = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

நாற்படை

  • நாற்படை = நான்கு + படை
  • நாற்படை = யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை

நாற்பொருள்

  • நாற்பொருள் = நான்கு + பொருள்
  • நாற்பொருள் = அறம், பொருள், இன்பம், வீடு

ஐம்பூதங்கள்

  • ஐம்பூதங்கள் = ஐந்து + பூதங்கள்
  • ஐம்பூதங்கள் = நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு

ஐம்புலன்

  • ஐம்புலன் = ஐந்து + புலன்
  • ஐம்புலன் = தொடுதல், உண்ணல், மோத்தல், காணல், கேட்டல்

ஐம்பொறி

  • ஐம்பொறி = ஐந்து + பொறி
  • ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி

ஐந்திலக்கணம்

  • ஐந்திலக்கணம் = ஐந்து + இலக்கணம்
  • ஐந்திலக்கணம் = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

ஐந்திணை

  • ஐந்திணை = ஐந்து + திணை
  • ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

ஐந்தொகை

  • ஐந்தொகை = ஐந்து + தொகை
  • ஐந்தொகை = முதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்

ஐம்பொன்

  • ஐம்பொன் = ஐந்து + பொன்
  • ஐம்பொன் = பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்

ஐம்பால்

  • ஐம்பால் = ஐந்து + பால்
  • ஐம்பால் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்

அறுசுவை

  • அறுசுவை = ஆறு + சுவை
  • அறுசுவை = இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, கரிப்பு, கார்ப்பு

ஏழிசை

  • ஏழிசை = ஏழு + இசை
  • ஏழிசை = குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.

 

 

Leave a Reply