தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல்
தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல்

  • தமிழில் தோன்றிய முதல் உரைநூல் = இறையனாரகப்பொருள் உரை
  • தமிழில் முதன் முதலாக அகராதி என்ற சொல்லைப் பயன்படுத்திய நூல் = 1594 இல் எழுதப்பட்ட “அகராதி நிகண்டு”. இதன் ஆசிரியர் = இரேவணசித்தர்.
  • தமிழில் தோன்றிய முதல் நிகண்டு = சேந்தன் திவாகரம் (ஆசிரியர் = திவாகர முனிவர்)
  • ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் எழுதியவர் = திரு.வி.க
  • அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்று முதன் முதலில் அழைத்தவர் = திரு.வி.க
  • ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் வார்த்தையை (பதத்தை) முதன்முதலில் பயன்படுத்தியவர் = திரு.வி.க
  • இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
  • தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
  • தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)
  • இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆங்கில வார இதழ் = ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் துவக்கிய “மெட்ராஸ் கூரியர்” (Madras Courier)
  • தமிழில் வெளிவந்த முதல் வார இதழ் = பெர்சிவல் பாதிரியாரின் “தினவர்த்தமானி”

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • 1850 ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ (Delhi Sketch Book), என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.
  • தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும்.
  • உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு = மலேசியா. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழி = தமிழே.
  • இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.
  • போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழில் முதன் முதல்

  • முதல் தமிழ்க் கணினி = திருவள்ளுவர். தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது.
  • அரவாணிகள் (திருநங்கையர்) பற்றிய முதல் நாவல் ‘வாடா மல்லி’. எழுதியவர் சு. சமுத்திரம்.
  • தமிழின் முதல் சரித்திர நாவல் = கல்கியின் “பார்த்திபன் கனவு”
  • சாகித்திய காதமி விருது பெற்ற தமிழின் முதல் நாவல் = கல்கியின் “அலை ஓசை”.
  • வெளிநாட்டு (அயல்) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல் = தொ.மு.சிதம்பர ரகுநாதனின் `பஞ்சும் பசியும்’ நாவல்.
  • இலக்கிய விமர்சனம் பற்றிய தமிழின் முதல் நூல் = தொ.மு.சிதம்பர ரகுநாதனின் “இலக்கிய விமர்சனம்”
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = ரா.பி. சேதுப்பிள்ளை. அவரின் “தமிழ் இன்பம்” நூலிற்காக 1955 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • கட்டுரை தொகுப்பு நூலிற்காக தமிழில் சாகித்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்? = ரா.பி. சேதுப்பிள்ளை. அவரின் “தமிழ் இன்பம்” என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிற்கு 1955 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • புதின படைப்பிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = கல்கி. அவரின் “அலையோசை” என்ற புதினத்திற்கு 1956 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • உரைநடை நூலிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = ராஜாஜி. அவர் எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” என்னும் உரைநடை நூலிற்கு 1958 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • பயண இலக்கிய நூலிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்? = சோமு (மீ.ப. சோமசுந்தரம்). அவர் இயற்றிய “அக்கரைச் சீமையில்” என்ற நூலிற்கு 1962 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • வாழ்க்கை வரலாற்று நூலிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா. இவர் எழுதிய “ஸ்ரீ ராமானுஜர்” என்னும் நூலிற்கு 1965 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • இலக்கிய திறனாய்வு நூலிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = கி. வா. ஜெகந்நாதன். இவர் இயற்றிய “வீரர் உலகம்” என்ற நூலிற்கு 1967 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • கவிதை நூல் படைப்பிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = அ. சீனிவாச ராகவன். இவர் இயற்றிய “வெள்ளைப் பறவை” என்ற நூலிற்கு 1968 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • நாடக நூல் பிரிவில் தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = பாரதிதாசன். இவரின் “பிசிராந்தையார்” நாடகத்திற்கு 1969 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • சிறுகதைக்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = கு. அழகிரிசாமி. இவரின் “அன்பளிப்பு” என்ற சிறுகதை தொகுப்பிற்கு 1970 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • இலக்கிய வரலாறு நூலிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = பி.எஸ். ராமையா. இவரின் “மணிக்கொடி காலம்” என்ற நூலிற்கு 1982 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • தன் வரலாறு நூலிற்காக தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = லா.ச.ராமாமிர்தம். இவரின் “சிந்தாநதி” என்ற நூலிற்கு 1989 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)
  • விமர்சன நூல் பிரிவில் தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் எழுத்தாளர்? = தி.க. சிவசங்கரன். இவர் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” என்ற நூலிற்கு 2000 வது ஆண்டில் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கட்டுரை தொகுப்பு நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் புதினம் (நாவல்)? = கல்கி இயற்றிய “அலையோசை” (1956)

தமிழில் முதன் முதல்

  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் உரைநடை நூல்? = ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” (1958)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பயண நூல்? = சோமு அவர்கள் இயற்றிய “அக்கரைச் சீமையில்” (1962)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் வாழ்க்கை வரலாற்று நூல்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள் இயற்றிய “ஸ்ரீ ராமானுஜர்” (1965)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய திறனாய்வு நூல்? = கி. வா. ஜெகந்நாதன் இயற்றிய “வீரர் உலகம்” (1967)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்? = அ. சீனிவாச ராகவன் இயற்றிய “வெள்ளைப் பறவை” (1968)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாடக நூல்? = பாரதிதாசனின் “பிசிராந்தையார்” நாடகம் (1969)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் சிறுகதை தொகுப்பு நூல்? = கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” (1970)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய வரலாறு நூல்? = பி.எஸ். ராமையா அவர்களின் “மணிக்கொடி காலம்” (1982)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் தன் வரலாறு நூல்? = லா.ச.ராமாமிர்தம் அவர்களின் “சிந்தாநதி” (1989)
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் விமர்சன நூல்? = தி.க. சிவசங்கரன் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” (2000).
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் = ராஜம் கிருஷ்ணன்.

 

 

 

 

Leave a Reply