மதசார்பின்மை

மதசார்பின்மை

மதசார்பின்மை
மதசார்பின்மை

மதசார்பின்மை என்றால் என்ன

                இந்தியச் சூழ்நிலையில் சமயச்சார்பின்மை (மதசார்பின்மை) என்பதற்கு, டொனால்ட் ஈஜின் ஸ்மித் என்பார் அளித்த விளக்கம், “சமயச் சார்பற்ற (Secular) நாடு என்பது தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் சமயச்சுதந்திரம் அளிக்கின்ற நாடாகும். அரசியலமைப்பு ரீதியாக அது, குறிப்பிட்ட எந்த ஒரு சமயதுடனும் தொடர்பற்றது, எந்த ஒரு சமயத்தையும் வளர்கவோ, தலையிடவோ செய்யாது”.

       மேலைநாடுகளில் சமயத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் சமயச்சார்பினை தோன்றியது. இந்தியாவில் அப்படியில்லை. இந்தியாவின் பன்முக இயல்புக்கு ஏற்றவாறு, அதன் பழைய வரலாற்றிலும் பண்பாட்டிலும் சமயச்சார்பின்மை வேரூன்றி இருக்கிறது. பல்வேறு சமூகப்பிரிவினரின் நியாயமான முறையை உருவாக்க வேண்டும் என்றே நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் விருப்பம் கொண்டிருந்தனர். எனவே நம் நாட்டில் நடைமுறையில் “வகுப்புவாதம்” என்பதற்கு எதிர்மறையாகவே “சமயச்சார்பின்மை” பயன்படுத்தப்பட்டு வருகிறது.

       இந்திய அரசசியல் அமைப்பு சட்டத்தில், “சமயச்சார்பின்மை” என்ற வார்த்தை 1976-ம் ஆண்டு 42-வது சட்டத் திருத்தத்தின் (42nd Amendment Act, 1976) மூலம் சேர்க்கப்பட்டது.

     42-வது சட்டத் திருத்தத்திற்கு முன்னர் நமது சட்டத்தின் பிரிவு 25(2)-ல் மட்டுமே “சமயச்சார்பற்ற” என்ற சொல் இடம் பெற்றிருந்தது.

மதசார்பின்மை

       சமய நடைமுறைகளுடன் சம்பத்தப்பட்ட சமயச்சார்பற்ற செயல்பாடுகளை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரிவு அரசுக்கு அதிகாரம் அளித்தது.

       1974-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில் கூறியதாவது, “மதசார்பற்ற நாடு என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை என்றபோதிலும், நமது அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று எண்ணியே சட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதற்காகத் தான் விதி 25 முதல் 28 வரையிலான மதச்சுதந்திரம் (Fundamental Right to Freedom of Religion) தொடர்பான அடிப்படை உரிமைகள் கொண்டுவரப்பட்டன” எனக் கூறியது.

       முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி “கஜேந்திரகட்கர்” கூறியதாவது, “இந்திய அரசியல் அமைப்பில் கூறப்படும் சமயச்சார்பின்மை என்பது குடிமக்கள் எந்த மதத்தவராயினும், சமயத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்காமல் அனைவருக்கும் சமஉரிமை அளிப்பதே ஆகும். எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கும் நாடு கட்டுப்பட்டதல்ல; அது சமயமற்றதும் அல்ல; சமயத்திற்கு எதிரானதும் அல்ல. எல்லாச் சமயங்களுக்கும் அது சமஉரிமை அளிக்கிறது” (Gajendragadkar, a former Chief Justice of India, defined secularism as in the Indian Constitution in the following way: ‘The State does not owe loyalty to any particular religion as such: it is not irreligious or anti-religious; it gives equal freedom to all religions)

 

 

 

Leave a Reply