10TH TAMIL கேட்கிறதா என் குரல்

10TH TAMIL கேட்கிறதா என் குரல்

10TH TAMIL கேட்கிறதா என் குரல்
10TH TAMIL கேட்கிறதா என் குரல்

10TH TAMIL கேட்கிறதா என் குரல்

  • உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கையே.
  • இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது. காற்றே எங்கும் நிறைந்திருக்கிறது.

ஐம்பெரும் பூதங்கள்

  • தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.
  • அவற்றில் ஒன்று = காற்று.

திருமூலரின் திருமந்திரம்

  • திருமந்திரத்தை இயற்றியவர் = திருமூலர்.
  • திருமூலர் தமது திருமந்திரத்தில் “மூச்சுப் பயிற்சியே” உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பிற்கால ஔவையார்

  • பிற்கால ஔவையார் தனது குறளில் “வாயுதாரணை“ எனும் அதிகாரத்தில் காற்றை சிறப்பித்து கூறியுள்ளார்.

வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம்உண் டாம்

–    ஔவை குறள், 49

காற்றின் பல பெயர்கள்

  • காற்றிற்கு பல பெயர்கள் உண்டு. அவை = காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் நான் அழைக்கப்படுகிறேன். பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத் தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சுழல்காற்று, சூறாவளிக்காற்று.

கிழக்கு திசைக் காற்று

  • கிழக்கு என்பதற்கு “குணக்கு” என்ற பெயரும் உண்டு.
  • கிழக்கு திசையில் வீசும் காற்று = கொண்டல் காற்று.
  • கொண்டல் காற்று குளிர்ச்சியை தரும்.
  • மழையை தரும் காற்று இது.
  • கடல் பகுதிக்கு மேல் உள்ள மழை மேகங்களை சுமது வருவதால் இக்காற்றை “மலைக்காற்று” என்று கூறுவர்.

மேற்கு திசைக் காற்று

  • மேற்கு என்பதற்கு “குடக்கு” என்ற பெயரும் உண்டு.
  • மேற்கில் இருந்து வீசும் காற்று = கோடைக் காற்று.
  • வலிமையான காற்று இது.
  • வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசும் காற்று.
  • “வெப்பக்காற்று” என்று மேற்கில் இருந்து வீசும் காற்றை கூறுவர்.

வடக்கு திசைக் காற்று

  • வடக்கு திசைக்கு “வாடை” என்ற பெயரும் உண்டு.
  • வடக்கில் இருந்து வீசும் காற்று = வாடைக்காற்று.
  • பனிப்பகுதியில் இருந்து வீசும் காற்று.
  • வடக்கு திசைக் காற்றை “குளிர்ச்சியான ஊதைக்காற்று” என்று கூறுவர்.

தெற்கு திசைக் காற்று

  • தெற்கு திசையில் இருந்து வீசும் காற்று = தென்றல்.
  • மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான காற்றை வழங்கும் இது.

சிலப்பதிகாரத்தில் காற்று

  • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், காற்றை “பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும் பொழுது, கூடவே வண்டுகளையும் அழைத்து வருகிறது” என்பதை நயமாக கூற

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்

என்று கூறுகிறார்.

பலபட்டடைச் சொக்கநாத புலவர்

  • “பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது” என்ற நூலின் ஆசிரியர் = பலபட்டடைச் சொக்கநாத புலவர்
  • பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது நூலில், பெண் ஒருத்தி தென்றலை தூதாக அனுப்பினாள், இதனை புலவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்

செந்தமிழின் பின்னுதித்த தென்றலே

பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார்

  • புறநானூற்று பாடல் ஒன்றில் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் அவர்கள்,

“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

 களிஇயல் யானைக் கரிகால் வளவி!”

என்று கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில், காற்றினை “வளி” எனக் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்

  • கிரேக்க அறிஞர் “ஹிப்பாலஸ்” (Hippalus) என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு.
  • அதற்கும் முன்னரே என் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

ஹிப்பாலஸ் பருவக்காற்று

10TH TAMIL கேட்கிறதா என் குரல்
10TH TAMIL கேட்கிறதா என் குரல்
  • கி.பி. முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
  • அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன.
  • அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.
  • ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

பருவக்காற்று

  • ஜூன் முதல் செப்டம்பர் வரை = தென்மேற்கு பருவக்காற்று
  • அக்டோபர் முதல் டிசம்பர் வரை = வடகிழக்கு பருவக்காற்று
  • இந்தியாவிற்கு 70% மழை தருவது = தென்மேற்கு பருவக்காற்று

ஐயூர் முடவனார்

  • “வளி மிகின் வலி இல்லை” என்று கூறியவர் = ஐயூர் முடவனார்
  • “வளி மிகின் வலி இல்லை” என்ற பாடல் அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.

மதுரை இளநாகனார்

  • புறநானூற்று பாடல் ஒன்றில், கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்ற செய்தியை கூறிய புலவர் = மதுரை இளநாகனார்.

காற்றாலை மின்சாரம்

  • உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா “ஐந்தாவது” இடம்.
  • காற்றாலை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம்.

காற்று மாசு

  • உலகளவில் காற்று மாசுபடுத்தலில் இந்தியா இரண்டாமிடம் ஆகும்.
  • இந்தியாவில் மிகுந்த உயிர் இழப்பை தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் = காற்று மாசு.
  • குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும்.

உலக காற்று நாள்

  • உலக காற்று நாள் = ஜூன் 15 ஆம் தேதி.

தனிநாயகம் அடிகள்

  • “தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில், “திருவெம்பாவை, திருப்பாவை” பாடல்களை அவர்களின் தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்” என்ற செய்தியை தனிநாயகம் அடிகள் தனது “ஒன்றே உலகம்” என்னும் நூலில் குறிபிட்டுள்ளார்.

 

 

10TH TAMIL

Leave a Reply