10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்
10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்
- “பொருள்” என்றால் = ஒழுக்கமுறை.
- தமிழர்கள் வாழ்வியலை “அகம், புறம்” என இரண்டாக பிரித்திருந்தனர்.
- அகம், புறம் ஆகியவற்றை விளக்கும் இலக்கணம் = பொருள் இலக்கணம்
அகத்திணை என்றால் என்ன
- அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளை கூறுவது அகத்திணை எனப்படும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அகத்திணை எத்தனை வகைப்படும்
- அகத்திணை ஏழு வகைப்படும். அவை,
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- கைக்கிளை
- பெருந்திணை
அன்பின் ஐந்திணை என்பது யாது
- அகத்திணையில் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும்.
- அன்பின் ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
முதற்பொருள் என்பது யாது
முதற்பொருள் = நிலம் + பொழுது |
- முதற்பொருள் எனப்படுவது நிலமும், பொழுதும் ஆகும்.
ஐவகை நிலங்கள் யாவை
- நிலம் ஐந்து வகைப்படும். அவை,
- குறிஞ்சி = மலையும் மலை சார்ந்த இடமும்
- முல்லை = காடும் காடு சார்ந்த இடமும்
- மருதம் = வயலும் வயல் சார்ந்த இடமும்
- நெய்தல் = கடலும் கடல் சார்ந்த இடமும்
- பாலை = சுரமும் சுரம் சார்ந்த இடமும்
பொழுது எத்தனை வகைப்படும்
- பொழுது இரண்டு வகைப்படும். அவை,
- பெரும்பொழுது
- சிறுபொழுது
பெரும்பொழுது என்றால் என்ன
- பெரும்பொழுது = ஓராண்டின் ஆறு கூறுகள்.
- ஓராண்டின் ஆறு கூறுகளை நமது முன்னோர் பெரும்பொழுது என வகைப்படுத்தி உள்ளனர். அவை,
- கார்காலம் = ஆவணி, புரட்டாசி
- குளிர்காலம் = ஐப்பசி, கார்த்திகை
- முன்பனிக் காலம் = மார்கழி, தை
- பின்பனிக் காலம் = மாசி, பங்குனி
- இளவேனிற்காலம் = சித்திரை, வைகாசி
- முதுவேனிற் காலம் = ஆனி, ஆடி
சிறுபொழுது என்றால் என்ன
- சிறுபொழுது = ஒரு நாளின் ஆறு கூறுகள்.
- ஒரு நாளின் ஆறு கூறுகளை நமது முன்னோர் சிறுபொழுது என வகைப்படுத்தி உள்ளனர். அவை,
- காலை = காலை 6 மணி முதல் 10 மணி வரை
- நண்பகல் = காலை 10 மணி முதல் 2 மணி வரை
- எற்பாடு = பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
- மாலை = மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
- யாமம் = இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
- வைகறை = இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.
எற்பாடு என்றால் என்ன
- எல் + பாடு = எற்பாடு
- “எல்” என்பதன் பொருள் = ஞாயிறு
- “பாடு” என்பதன் பொருள் = மறையும் நேரம்.
- “எற்பாடு” என்றால் = சூரியன் மறையும் நேரம்.
கருப்பொருள் என்றால் என்ன
- ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு, உணவு, பூ, மரம், பறவை, ஊர் போன்றவை கருப்பொருள்கள் ஆகும்.
ஐந்திணை பொழுதுகள்
தினையும் பொழுதும் |
||
திணை | பெரும்பொழுது |
சிறுபொழுது |
குறிஞ்சி |
குளிர்காலம், முன்பனிக்காலம் | யாமம் |
முல்லை | கார்காலம் |
மாலை |
மருதம் |
ஆறு பெரும்பொழுதுகள் | வைகறை |
நெய்தல் | ஆறு பெரும்பொழுதுகள் |
எற்பாடு |
பாலை |
இளவேனில், முதுவேனில், பின்பனி |
நண்பகல் |
கருப்பொருள் அட்டவணை
கருப்பொருள் |
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் |
கொற்றவை |
மக்கள் |
வெற்பன், குறவர், குறத்தியர் | தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் | ஊரன், உழவர், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றியர் |
உணவு | மலைநெல், திணை | வரகு, சாமை | செந்நெல், வெண்ணெல் | மீன், உப்புக்கு விற்ற பொருள் |
சூறையாடலால் வரும் பொருள் |
விலங்கு |
புலி, கரடி, சிங்கம் | முயல், மான், புலி | எருமை, நீர்நாய் | முதலை, சுறா | வலியிழந்த யானை |
பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, தோன்றி | செங்கழுநீர், தாமரை | தாழை, நெய்தல் |
குரவம், பாதிரி |
மரம் |
அகில், வேங்கை | கொன்றை, காயா | காஞ்சி, மருதம் | புன்னை, ஞாழல் | இலுப்பை, பாலை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி, மயில் | நாரை, நீர்க்கோழி, அன்னம் | கடற்காகம் |
புறா, பருந்து |
ஊர் |
சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | அருவிநீர், சுனைநீர் | காட்டாறு | மனைக்கிணறு, பொய்கை | மணற்கிணறு, உவர்க்கழி |
வற்றிய சுனை, கிணறு |
பறை |
தொண்டகம் | ஏறு கோட்பறை | மணமுழா, நெல்லரிக்கிணை | மீன் கோட்பறை | துடி |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் |
பாலை யாழ் |
பண் |
குறிஞ்சிப் பண் | முல்லைப்பண் | மருதப்பண் | செவ்வழிப்பண் | பஞ்சுரப்பண் |
தொழில் | தேனெடுத்தல், கிழங்கு அகற்றுதல் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் | நெல்லரிதல், களை பறித்தல் | மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் |
வழிப்பறி, நிறை கவர்தல் |
- மலைபடுகடாம்
- கோபல்லபுரத்து மக்கள்
- பெருமாள் திருமொழி
- விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
- இலக்கணம் – பொது
- மொழிபெயர்ப்புக் கல்வி
- நீதிவெண்பா
- திருவிளையாடல் புராணம்
- வினா விடை வகைகள் பொருள்கோள்
- நிகழ்கலை
- பூத்தொடுத்தல்
- முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
- கம்பராமாயணம்