சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் = நர்த்தகி நடராஜ்.
நர்த்தகி நடராஜ்
ஊர் = மதுரையை அடுத்த அனுப்பானடி.
இவரின் தோழியின் பெயர் = சக்தி
தன் தோழி சக்தி இல்லாமல் இந்த உயரத்திற்கு தன்னால் வர முடிந்திருக்காது என்கிறார் நர்த்தகி நடராஜ்.
இவரின் நடன ஆசிரியர் = தஞ்சை கிட்டப்பா
இவருக்கு “நர்த்தகி” என்று பெயரிட்டவர் = தஞ்சை கிட்டப்பா
சங்க காலத்தில் திருநங்கையர் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் உள்ளது.
சிலப்பதிகாரத்தில் 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
“அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாகப் பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்” என்பது = காந்தியின் ஆசை ஆகும்.
தான் வழக்கறிஞராக வேண்டும் என்று லட்சியம் கொண்டவர் நர்த்தகி.
“தாமரை நெஞ்சம்” என்ற நூலை எழுதியவர் = அகிலன்
அகிலனின் “தாமரை நெஞ்சம்” கதைநாயகி துக்கம் பொங்கி வரும் போதெல்லாம் ஒரு சொம்புத் தண்ணீர் குடிப்பாள்.
நர்த்தகி நடராஜ் நடத்தும் அறக்கட்டளை = வெள்ளியம்பலம் அறக்கட்டளை
“திருநங்கை” என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் = நர்த்தகி நடராஜ்
கடவுச்சீட்டு பெற்ற முதல் திருநங்கை = நர்த்தகி நடராஜ்
தேசிய விருது பெற்ற முதல் திருநங்கை = நர்த்தகி நடராஜ்
மதிப்புறு முனைவர் பெற்ற முதல் திருநங்கை = நர்த்தகி நடராஜ்
நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது
இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
இந்திய அரசுத் தொலைக்காட்சியின் ஏ கிரேடு கலைஞர்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்.
11TH TAMIL செல்வி
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்
சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி மிகுந்த சிரமங்களுக்கிடையில் 2011 ஆம் ஆண்டு கணினிப் பாடப்பிரிவு இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
அவர் தற்போது சென்னையில் காவல்துறையின் சட்டம் – ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமை பெற்றவர் = பிரித்திகா யாஷினி
லோக் அதாலத் நீதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான ஜோயிதா மோண்டல் மாகி.
இவர் திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றி வருகிறார்.
வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் லோக் அதாலத் நீதிபதியாக அண்மையில் ஜோயிதா மோண்டல் நியமிக்கப்பட்டார்.
லோக் அதாலத் நீதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை = ஜோயிதா மோண்டல்
தாரிகா பானு
தமிழ்நாட்டில், கல்வித்துறையில் மூன்றாம் பாலினப்பிரிவு உருவாக்கப்பட்ட பின்பு பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் தாரிகா பானு.
இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில், காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்றார்.
2017ஆம் ஆண்டு நடந்த மேல்நிலைப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.