11TH TAMIL பிம்பம்

11TH TAMIL பிம்பம்

11TH TAMIL பிம்பம்

11TH TAMIL பிம்பம்

  • நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள், விருப்பங்கள் உள்ளன.
  • ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில் அவர்களுக்கேற்றவாறு நம்மை மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்; வளைந்து கொடுக்கிறோம்.
  • ஆனால் நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
  • நாம் மற்றவர்களுக்காக அவர்களுக்கேற்ற முகமூடிகளை மாட்டிக்கொள்கிறோம்.
  • முகம் மாற்றி முகம் மாற்றி நம் உண்மை முகத்தையே இழந்து அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறோம்.
  • மாற்றி மாற்றி நாம் காட்டுகிற பிம்பம் பற்றி நம் மனசாட்சியைக் கேள்வி கேட்பதோடு நம் அசலையும் நினைவூட்டுகிறது இச்சிறுகதை.

பிரபஞ்சன்

  • பிரபஞ்சன் அவர்களின் இயற் பெயர் = வைத்தியலிங்கம்
  • ஊர் = புதுச்சேரி
  • இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்ற பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.
  • 1995 இல் இவருடைய வரலாற்று புதினமான “வானம் வசப்படும்” (ஆனந்தரங்கர் தொடர்புடையது) சாகித்திய அகாதமி விருது வென்றது.
  • இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Leave a Reply