உதயணனின் தாய் கருவுற்று இருந்தபோது, சரபம் என்னும் ஒரு பறவை அரண்மனையில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது.
அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல், துறவு பூணுதல் வரையான கதையைக் கூறுகிறது இக்காப்பியம்.
ஆசிரியப்பாவின் நேர்த்தியான வடிவமைப்பில் பல கருத்துகளைச் செம்மையாக ஆசிரியர் பேசியுள்ளார்.
நுணுக்கமான கலைத் திறன்கள் விளக்கப்பட்டிருப்பது போல ஆட்சித் திறனுக்கு அவசியமான கருத்துகளும் கூறப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.