6TH TAMIL ஒளி பிறந்தது
6TH TAMIL ஒளி பிறந்தது
- குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவர் மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம்.
- மாணவர்கள் முன்னேற பல வழிகளை எடுத்துச் சொன்னவர்
- எதிர்காலம் பற்றிக் கனவுகண்டு, அதை அடைய வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அப்துல் கலாமிற்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படக் காரணம்
- அப்துல் களம் அவர்கள் 10 வயது சிறுவனாக இருந்த பொழுது அவரின் அறிவியல் ஆசிரியர் பறவைகள் எப்படி பறக்கின்றன என்பதை விளக்கினார்.
- அது முதல் கலாம் அவர்களுக்கு வானில் பறக்க வேண்டும் என்ற ஆசையே அவரின் வாழ்க்கை குறிகோளாக மாறிவிட்டது.
- அதுவே கலாம் அவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்தது.
கலாம் அவர்களுக்கு பிடித்த புத்தகம்
- கலாம் அவர்களுக்கு தமிழில் மிகவும் பிடித்த நூல் = திருக்குறள்.
- கலாம் அவர்கள் தன் வாழ்விற்கு வலு சேர்த்ததாக கூறு திருக்குறள் = “அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்”.
- கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் = லிலியன் வாட்சன் என்பவரின் “விளக்குகள் பல தந்த ஒளி” (LIGHTS FROM MANY LAMPS).
- லிலியன் வாட்சன் என்பாரின் “விளக்குகள் பல தந்த ஒளி” என்ற புத்தகத்தை படித்ததின் மூலம் “அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி” ஆகிய மூன்றையும் பெற்றதாக கூறியுள்ளார்.
கலாம் பெரிதும் மகிழ்ந்த நிகழ்வு
- போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களுக்கு பதிலாக பாதுகாப்பு கருவிகளில் பயன்படுத்தப்படும் “கார்பன் இழைகளைக்” கொண்டு 300 கிராம் எடை குறைந்த செயற்கைக் கால்களை உருவாக்கி தந்த நிகழ்ச்சியே தான் பெரிதும் மகிழ்ந்த நிகழ்ச்சியாக கலாம் கூறுகிறார்.
சுதந்திர இந்தியாவின் வெற்றிகள்
- சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக அப்துல் கலாம் குறிப்பிடுவது,
- உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்.
- எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.
- அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில்
- உள்ளோம்.
- நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
- பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா
- நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மூன்று சிறப்புகளை பெற்றிருக்கும் என்கிறார் கலாம். அவை,
- ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.
- அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும், நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.
- செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.
உலகின் முதல் விஞ்ஞானிகள்
- இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் என அப்துல் கலாம் குறிப்பிடுவது = குழந்தைகளை.
வெற்றிக்கான இரண்டு வழிகளை கூறும் கலாம்
- அப்துல் கலாம் அவர்கள் வெற்றிக்கான இரண்டு வழிகளை கூறியுள்ளார். அவை
- அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள்.
- வியர்வை! வியர்வை! வியர்வை!
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- 6TH TAMIL ஒளி பிறந்தது
- 6TH TAMIL ஒளி பிறந்தது
- 6TH TAMIL ஒளி பிறந்தது
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்