7TH TAMIL அணி இலக்கணம்

7TH TAMIL அணி இலக்கணம்

7TH TAMIL அணி இலக்கணம்

7TH TAMIL அணி இலக்கணம்

  • “அணி” என்பதன் பொருள் = அழகு.
  • ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உவமை அணி என்றால் என்ன

  • ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.
  • உவம உருபுகளாக வருபவை = போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ.
  • எ.கா:
    • மயில் போல ஆடினாள்.
    • மீன் போன்ற கண்.
7TH TAMIL அணி இலக்கணம்
7TH TAMIL அணி இலக்கணம்
  • இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர்.
  • இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர்.
  • உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர்.
  • இத்தொடர்களில் வந்துள்ள ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.
  • எ.கா:
    • அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
  • பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.
  • இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை.
  • நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). ‘போல’ என்பது உவம உருபு.
7TH TAMIL அணி இலக்கணம்
7TH TAMIL அணி இலக்கணம்

எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன

  • உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
  • எ.கா:
    • தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு
  • மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்.
  • மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
  • இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை.
  • மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்.
  • இடையில் ‘அதுபோல்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

இல்பொருள் உவமையணி என்றால் என்ன

  • உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.
  • எ.கா:
    • மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
    • காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.
  • இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது போல்’, ‘கொம்பு முளைத்த குதிரை போல’ என்னும் உவமைகள் வந்துள்ளன.
  • உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை.
  • கொம்பு முளைத்த குதிரையும் இல்லை.
  • இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.

 

 

Leave a Reply