7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

  • நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
  • அதுபோலவே சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும்
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருநெல்வேலிச் சீமை

  • திருநெல்வேலிச் சீமை = திருநெல்வேலி + தூத்துக்குடி மாவட்டங்கள்.
  • திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.
7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

பாரதியாரும் தேசிக விநாயகனாரும்

  • பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம்.
  • தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.

கடிகைமுத்துப் புலவர்

  • கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது.
  • அங்கே சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர்.
  • அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

சீவலப்பேரி என்கிற முக்கூடல்

  • மணியாச்சியி அருகே தாமிரபரணி ஆறும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல்.
  • முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான்.
  • “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி – மலை யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = முக்கூடற்பள்ளு.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

  • மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்தவர்.
  • நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயைத் தரிசித்தார்.

சீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி

  • பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.
  • நம்மாழ்வார் அவதார ஸ்தலம் = ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்).
  • ஆழ்வார்திருநகரி பகுதியை பழங்காலத்தில் அழைத்த பெயர் = திருக்குருகூர்.
  • நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் (திருவாய்மொழியில்) வெளியிட்டார்.

முத்தொள்ளாயிர ஆசிரியர்

  • முத்தொள்ளாயிரம் நூலின் ஆசிரியர் “கொற்கை” நகரின் புகழ்பெற்ற முத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.
  • மேற்கே ரோமாபுரி, கிரேக்கதேசம் முதல் கிழக்கே சைனா வரையும் கொற்கையிலிருந்தே முத்து போய்க் கொண்டிருந்தது.

வள்ளல் சீதக்காதி

  • வள்ளல் சீதக்காதியின் ஊர் = காயல்பட்டினம்,
  • வள்ளல் சீதக்காதி தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தார்.
  • வள்ளல் சீதக்காதியின் இறப்பை, நமச்சிவாயப் புலவர் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்.

பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்

நாமாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக்

கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச்

சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே!

–    நமச்சிவாயப் புலவர்

காவடிச்சிந்து அண்ணாமலையார்

  • கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து பாடியவர் = காவடிச்சிந்து அண்ணமலையார்.
  • காவடிச்சிந்து பாட பம்பை, மேளம் போன்ற கருவிகள் அவசியம் ஆகும்.

அழகிய சொக்கநாதர்

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
  • சங்கரன்கோவில் “கோமதித் தாய்” மீது பல பக்திப் பாடல்களை பாடியவர் = திருநெல்வேலி அழகிய சொக்கநாதர்.

‘வாடா’ என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்

கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!

–    அழகிய சொக்கநாதர்

கருவைநல்லூர்

  • சங்கரன்கோயிலுக்கு அருகே உள்ள ஊர் கருவைநல்லூர்.
  • இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர்.
  • இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.
  • திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி நூல்களை பாடியவர் = அதிவீரராம பாண்டியன்.

நுண் துளி தூங்கும் குற்றாலம்

  • கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம்.
  • “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் = திருஞானசம்பந்தர்.

குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
  • குற்றாலத்தின் பெருமையை கூறும் விதமாக மாணிக்கவாசகர் தனது பாடலில் குற்றாலத்தை குறிப்பிட்டுள்ளார்.

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்

கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!

–    மாணிக்கவாசகர்

திரிகூடராசப்பக் கவிராயர்

  • உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்த நூல் = குற்றாலக் குறவஞ்சி.
  • குற்றாலத்துக்குக் அருகே உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.
  • இந்நூலில் குறி சொல்லுகிற பெண் குற்றாலமலையின் பெருமையைக் கூறுகிறாள்.

கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!

கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!

துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்

துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!

இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
  • டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்;
  • தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்;
  • இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர்.
  • இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.
  • இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.
  • “இதய ஒலி” என்னும் நூலின் ஆசிரியர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
  • “கடித இலக்கியத்தின் முன்னோடி” என அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
  • “தமிழிசைக் காவலர்” என்று அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
  • “வளர்தமிழ் ஆர்வலர்” என்று அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
  • “குற்றால முனிவர்” என்று அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்.

 

 

 

Leave a Reply