7TH TAMIL வயலும் வாழ்வும்

7TH TAMIL வயலும் வாழ்வும்

7TH TAMIL வயலும் வாழ்வும்

7TH TAMIL வயலும் வாழ்வும்

  • உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன.
  • அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும்.
  • நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • குழி = நில அளவைப்பெயர்
  • சாண் = நீட்டல் அளவைப்பெயர்
  • மணி = முற்றிய நெல்
  • சும்மாடு = பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணிச்சுருள்
  • சீலை = புடவை
  • மடை = வயலுக்கு நீர் வரும் வழி
  • கழலுதல் = உதிர்தல்

பாடல் பொருள்

  • உளவு செய்யும் மக்கள் ஒன்றரை குழி நிலத்தை தேர்வு செய்தனர்.
  • ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் நட்டனர்.
7TH TAMIL வயலும் வாழ்வும்
7TH TAMIL வயலும் வாழ்வும்

போரடித்தல் என்றால் என்ன

  • அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர்.
  • நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
7TH TAMIL வயலும் வாழ்வும்
7TH TAMIL வயலும் வாழ்வும்

நாட்டுப்புறப்பாடல் குறிப்பு

  • நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
  • இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.
  • “வாய்மொழி இலக்கியம்” என அழைக்கப்படுவது = நாட்டுப்புறப்பாடல்கள்.
  • பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
  • “மலை அருவி” என்னும் நூலின் ஆசிரியர் = கி.வா. ஜகந்நாதன்.

 

 

 

Leave a Reply