7TH TAMIL புதுமை விளக்கு

7TH TAMIL புதுமை விளக்கு

7TH TAMIL புதுமை விளக்கு

7TH TAMIL புதுமை விளக்கு

  • உள்ளத்தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு.
  • இறைவழிபாட்டில் சடங்குகளை விட உள்ளத் தூய்மையே முதன்மையானது
  • இயற்கையையும் தம் உள்ளத்து அன்பையும் விளக்காக ஏற்றி வழிபட்ட சான்றோர்களின் பாடல்களைக் கற்று மகிழ்வோம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பொய்கையாழ்வார் பாடல்

7TH TAMIL புதுமை விளக்கு
7TH TAMIL புதுமை விளக்கு

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

–    பொய்கையாழ்வார்

அருஞ்சொற்பொருள்

  • வையம் = உலகம்
  • வெய்ய = வெப்பக்கதிர் வீசும்
  • இடர்ஆழி = துன்பக்கடல்
  • சொல்மாலை = பாமாலை
  • சுடர்ஆழியான் = ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

பாடலின் பொருள்

  • பூமி = அகல் விளக்காகவும்
  • கடல் = நெய்யாகவும்
  • கதிரவன் = சுடராகவும்
  • சக்கரத்தை உடைய திருமாலின் திருவடிகளில் என் துன்பக்கடல் நீங்க வேண்டும்.

பொய்கையாழ்வார் ஆசிரியர் குறிப்பு

  • பொய்கையாழ்வார் பிறந்த ஊர் = காஞ்சிபுரம் அருகிலுள்ள திருவெஃகா.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள “முதல் திருவந்தாதி” பொய்கையாழ்வார் பாடியது ஆகும்.

பூதத்தாழ்வார் பாடல்

7TH TAMIL புதுமை விளக்கு
7TH TAMIL புதுமை விளக்கு

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்   

–    பூதத்தாழ்வார்

அருஞ்சொற்பொருள்

  • தகளி = அகல்விளக்கு
  • ஞானம் = அறிவு
  • நாரணன் = திருமால்

பாடலின் பொருள்

  • அன்பு = அகல்விளக்காகவும்
  • ஆர்வத்தை = நெய்யாகவும்
  • மனத்தை = திரியாகவும்
  • ஞான ஒளியாகிய சுடர் விளக்கை திருமாலுக்கு ஏற்றினேன்.

பூதத்தாழ்வார் ஆசிரியர் குறிப்பு

  • பூதத்தாழ்வார் பிறந்த ஊர் = சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள “இரண்டாவது திருவந்தாதி” பூதத்தாழ்வார் பாடியது ஆகும்.
  • “ஞானத்தமிழ் புரிந்த நான்” என்று பாடிய ஆழ்வார் = பூதத்தாழ்வார்.

அந்தாதி என்றால் என்ன

  • ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர்.
  • (அந்தம் – முடிவு, ஆதி – முதல்).
  • இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

  • திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
  • அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும்.
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தை தொகுத்தவர் = நாதமுனி.

முதலாழ்வார்கள் மூவர்

  • திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
  • பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

 

 

 

Leave a Reply