6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்

  • தமிழில் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை,
    • முதல் எழுத்துகள்
    • சார்பு எழுத்துகள்

முதல் எழுத்துகள் மொத்தம்

  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
  • முதல் எழுத்துகள் மொத்தம் = 30
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன.
  • எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சார்பு எழுத்துகள்

  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்.
  • சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
    • உயிர்மெய்
    • ஆய்தம்
    • உயிரளபெடை
    • ஒற்றளபெடை
    • குற்றியலிகரம்
    • குற்றியலுகரம்
    • ஐகாரக்குறுக்கம்
    • ஔகாரக்குறுக்கம்
    • மகரக் குறுக்கம்
    • ஆய்தக்குறுக்கம்
6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்
6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்

உயிர்மெய் எழுத்து

  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

ஆய்த எழுத்து

  • மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
  • நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

 

 

 

Leave a Reply