7TH TAMIL கலங்கரை விளக்கம்
7TH TAMIL கலங்கரை விளக்கம்
- கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று
- கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர்.
- கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பெரும்பாணாற்றுப்படை பாடல்
வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை – கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
அருஞ்சொற்பொருள்
- மதலை = தூண்
- ஞெகிழி = தீச்சுடர்
- அழுவம் = கடல்
- சென்னி = உச்சி
- உரவுநீர் = பெருநீர்ப் பரப்பு
- கரையும் = அழைக்கும்
- வேயா மாடம் = வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆசிரியர் குறிப்பு
- கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
- இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
- இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
- பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
- இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன
- வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.
பத்துப்பாட்டு நூல்கள் யாவை
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்.
7TH TAMIL
-
- எங்கள் தமிழ்
- ஒன்றல்ல இரண்டல்ல
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- சொலவடைகள்
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு