7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்

  • ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர்

குறுக்கங்கள் என்றால் என்ன

  • ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு.
  • இதை மாத்திரை என்பர்.
  • ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை.
  • சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும்.
  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்

  • குறுக்கங்கள் நான்கு வகைப்படும். அவை,
    • ஐகாரக்குறுக்கம்
    • ஔகாரக்குறுக்கம்
    • மகரக்குறுக்கம்
    • ஆய்தக் குறுக்கம்

ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்

ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது = ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும். ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது = ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

  • ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
  • வையம், சமையல், பறவை என சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது.
  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.
  • ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது = ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது = ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்

சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது

  • ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
  • ஔவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் ஔகாரக்குறுக்கம் எனப்படும்.
  • ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
  • சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத குறுக்கம் = ஔகாரக்குறுக்கம்.
  • சொல்லின் முதலில் மட்டுமே வரும் குறுக்கம் = ஔகாரக்குறுக்கம்.

மகரக்குறுக்கம் என்றால் என்ன

தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது

  • அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
  • வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
  • போலும் என்னும் சொல்லைப் போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர்.
  • இச்சொற்களில் மகரமெய்யானது ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக் குறுக்கம் என்றால் என்ன

தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

  • அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
  • முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

 

 

7TH TAMIL

 

 

Leave a Reply