8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
- தமிழ் மொழியில் எழுதும் பொழுது இடப்பட வேண்டிய நிறுத்தற்குறிகள் பற்றிய குறிப்புகளை காண்போம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
காற்புள்ளி ( , )
- பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
- (எ.கா) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
- கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
- (எ.கா.) அன்புள்ள நண்பா,
- வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
- (எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
- மேற்கோள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.
- (எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து,” நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
- முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
- (எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
அரைப்புள்ளி ( ; )
- ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
- (எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.
- உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
- (எ.கா.) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி ( : )
- சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்.
- (எ.கா.) முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.
முற்றுப்புள்ளி ( . )
- சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
- (எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
- சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
- (எ.கா) திரு. வி. க.
- மா. க. அ.
- ஊ. ஒ. ந. நி. பள்ளி
- பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
- (எ.கா.) நெ. து. சுந்தரவடிவேலு
வினாக்குறி ( ? )
- வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும்.
- (எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி ( ! )
- மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
- (எ.கா.)
- தமிழின் இனிமைதான் என்னே! = வியப்பு
- பாம்பு! பாம்பு! = அச்சம்
- அந்தோ! இயற்கை அழிகிறதே! = அவலம்
ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
- தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
- (எ.கா.)
- ‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
- கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது ‘தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.
இரட்டை மேற்கோள் குறி ( “ “ )
- நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
- (எ.கா.)
- திரு. வி.க. மாணவர்களிடம்,” தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்; இன்பம் நுகருங்கள்” என்று கூறினார்.
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு