9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
- சமூகம், செம்மாந்து சீர்மையுடன் திகழப் பாகுபாடுகளற்ற மனவுறுதி படைத்த மக்கள் தேவை.
- அத்தகைய மக்களை உருவாக்கப் பகுத்தறிவு இன்றியமையாதது.
- பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகுத்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர் = பெரியார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள்
- வெண்தாடி வேந்தர்
- பகுத்தறிவுப் பகலவன்
- வைக்கம் வீரர்
- ஈரோட்டுச் சிங்கம்
- சுய மரியாதை சுடர்
- பெண்ணினப் போர் முரசு
- புத்துலகத் தொலை நோக்காளர்
- தெற்காசியாவின் சாக்ரடீஸ்
தந்தை பெரியார்
- மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் = தந்தை பெரியார்.
- தானே முயன்று கற்று, தானாகவே சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் = தந்தை பெரியார்.
பகுத்தறிவு என்றால் என்ன
- எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
பெரியாரின் கண்ணோட்டம்
- இக்கால வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு நிலையில், நடைமுறைக்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனே பெரியார் சிந்தித்தார்.
- சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அவரின் சிந்தனை புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்
- “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்று கூறியவர் = தந்தை பெரியார்.
- சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால் வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகின்றன. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.
- சாதி, மனிதனுக்கு தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.
கடவுள் மறுப்புக் கொள்கை
- மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? என்றவர் = தந்தை பெரியார்.
- மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? என்று கேட்டவர் = தந்தைப் பெரியார்.
- பெரியார் பின்பற்றிய கொள்கை = கடவுள் மறுப்புக் கொள்கை.
சமூக வளர்ச்சியில் கல்வி
- சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவி = கல்வி.
- “கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்றார் பெரியார்.
- “சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்” என்றார் பெரியார்.
- அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் பெரியார்.
- மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
தமிழில் அறிவியல் வளர்ச்சி
- ‘ஒரு மொழியின் தேவை என்பது, அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்’ என்று கூறினார் தந்தைப் பெரியார்.
- “மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்” என்றார் பெரியார்.
மொழி, இலக்கியம்
- இயற்கை அறிவைத் தரும் இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடைய முடியும் என்றார் பெரியார்.
திருக்குறளும் பெரியாரும்
- திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக்கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார்.
- பெரியார் மதிப்புமிக்க நூலாக கருதியது = திருக்குறள்.
- இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன;
- திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார் பெரியார்.
எழுத்துச் சீர்திருத்தம்
- “மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார் பெரியார்.
- உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார் (ஐயா – அய்யா, ஒளவை – அவ்வை).
- மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
- பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
பெண்கள் நலம் பற்றி பெரியார்
- நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.
- கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை, பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.
- வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்றார் பெரியார்.
சிக்கனத்தை போற்றிய பெரியார்
- சிக்கனம் என்னும் அருங்குணத்தைப் பெரியார் பெரிதும் வலியுறுத்தினார்.
- அதற்கேற்பத் தானும் வாழ்ந்து காட்டினார்.
- பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார்.
சிந்தனைச் சிறப்புகள்
- தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்.
- தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்தார்.
பெரியார் எதிர்த்தவை
- இந்தித் திணிப்பு
- குலக்கல்வித் திட்டம்
- தேவதாசி முறை
- கள் உண்ணுதல்
- குழந்தை திருமணம்
- மணக்கொடை
பெரியார் விதைத்த விதைகள்
- கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
- பெண்களுக்கான இடஒதுக்கீடு
- பெண்களுக்கான சொத்துரிமை
- குடும்ப நலத்திட்டம்
- கலப்புத் திருமணம்
- சீர்திருத்தத் திருமணம் ஏற்பு
பெரியார்
- 1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
- 27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
சுயமரியாதை இயக்கம்
- பெரியார் துவக்கிய இயக்கம் = சுயமரியாதை இயக்கம்
- சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு = 1925.
பெரியார் நடத்திய இதழ்கள்
- குடியரசு
- விடுதலை
- உண்மை
- ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
பெரியார் பற்றி பாரதிதாசன
தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் – பார் அவர்தாம் பெரியார் |
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- 9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
- 9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
- 9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
- 9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி