9TH TAMIL அக்கறை
9TH TAMIL அக்கறை
- உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார்.
- அவற்றின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள்.
- அவ்வகையில் புதுக்கவிதையின் வரலாறு நூறு ஆண்டுகளை எட்டுகிறது எனலாம்.
- புதுக்கவிதைகள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன.
- பரபரப்பான இந்நூற்றாண்டு வாழ்வின் நெருக்கடியில் மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
- கல்யாண்ஜி கவிதைகளிலும் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கணக்குறிப்பு
- உருண்டது = ஒன்றன் பால் வினைமுற்று
- போனது = ஒன்றன் பால் வினைமுற்று
- சரிந்து = வினையெச்சம்
- அனைவரும் = முற்றும்மை.
கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு
- கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்;
- சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
- வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார்.
- புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில.
- இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.
- பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது.
- கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது உள்ளிட்டவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள்.
- “ஒரு சிறு இசை” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- திருக்குறள்
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி