8TH TAMIL கோணக்காத்துப் பாட்டு
8TH TAMIL கோணக்காத்துப் பாட்டு
- இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது.
- மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுகிறது.
- ஆனால் அது சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்தி விடும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- முகில் = மேகம்
- கொடிகலங்கி = மிக வருந்தி
- சம்பிரமுடன் = முறையாக
- சேகரம் = கூட்டம்
- வின்னம் = சேதம்
- வாகு = சரியாக
- காலன் = எமன்
- மெத்த = மிகவும்
- காங்கேய நாடு = கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒன்று
பாடலின் பொருள்
- “வாங்கல்” என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட “தென்னம்பிள்ளைகள்” எல்லாம் வீணாயின.
- காங்கேய நாட்டில் பருத்தி செடிகள் அனைத்தும் குச்சிகளாக சிதைவு அடைந்தன.
- தொண்டைமான் நாட்டில் மரங்கள் வீழ்ந்தன.
- சித்தர்கள் வாழும் கொல்லிமலையில் புயல் வீசியது.
கும்மிப் பாடல்கள்
- நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர்.
- பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
- புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
- பேச்சுத் தமிழில் அமைந்த பாடல்கள் = கும்மிப் பாடல்கள்.
- கும்மிப் பாடல்கள், “பஞ்சக் கும்மிகள்” எனவும் அழைக்கப்பட்டன.
- “கோணக்காத்துப் பாட்டு” இயற்றியவர் = வெங்கம்பூர் சாமிநாதன்.
- “காத்து நொண்டிச் சிந்து” என்று அழைக்கப்படுவது = கோணக்காத்துப் பாட்டு.
- “பஞ்சக்கும்மிகள்” என்னும் நூலினை தொகுத்தவர் = புலவர் செ. இராசு.