TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEB 17

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEB 17

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEB 17 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 பிப்ரவரி 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியா

நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய ஹெல்மெட் – அரசு அறிவிப்பு

  • மத்திய சாலை போக்குவரத்து அம்னைசாகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்கையில் குழந்தைகள் உட்பட அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • பயணத்தின் போது குழந்தைகள் கீழே விழாமல் இருக்க “சேப்டி ஹார்னஸ்” எனப்படும் பாதுகாப்பு பெல்ட் உடன் குழந்தைகள் இணைக்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை

  • ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல் ஆகியவை இதன் மூலம் தடை செய்யப்படும்.

G20 செயலகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • ஜி20 செயலகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது // CABINET APPROVES SETTING UP OF G20 SECRETARIAT
  • இந்தியாவின் வரவிருக்கும் G20 பிரசிடென்சியை வழிநடத்துவதற்குத் தேவையான ஒட்டுமொத்த கொள்கை முடிவுகள் மற்றும் ஏற்பாடுகளை செயல்படுத்துவதற்கு இது பொறுப்பாகும்.
  • 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டுடன், 2022 டிசம்பர் 1 முதல் நவம்பர் 30, 2023 வரை இந்தியா முதல் முறையாக G20 தலைவர் பதவியை வகிக்கும்.

இந்திய தேசிய ஹைட்ரஜன் கொள்கை

  • இந்தியா தேசிய ஹைட்ரஜன் கொள்கையின் முதல் பகுதியை 17 பிப்ரவரி 2022 அன்று அறிவிக்கப்பட்டது. நாட்டில் பச்சை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்தக் கொள்கை // INDIA WILL LAUNCH THE FIRST PART OF THE NATIONAL HYDROGEN POLICY ON 17 FEBRUARY
  • கொள்கையின் முதல் பகுதி அரசாங்கத்தால் உடனடியாக செயல்படுத்தப்படும் கூறுகளை உள்ளடக்கியிருக்கும் மற்றும் இரண்டாவது பகுதி தற்போது செலவின நிதிக் குழுவிடம் உள்ளது.

கஞ்சா சாகுபடியை ஒழிக்க ‘ஆபரேஷன் பரிவர்தன்’

  • கஞ்சா சாகுபடி மற்றும் விநியோகத்தை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையான ‘ஆபரேஷன் பரிவர்தன்’ ஆந்திரப் பிரதேச காவல்துறை தொடங்கியது // THE ANDHRA PRADESH POLICE INITIATED ‘OPERATION PARIVARTAN’, A SPECIAL OPERATION UNDERTAKEN TO ELIMINATE THE CULTIVATION AND SUPPLY OF CANNABIS.
  • இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில டிஜிபி கவுதம் சவாங் விசாகப்பட்டினத்தில் 2 லட்சம் கிலோ கஞ்சாவை அழித்துள்ளார்.

தமிழகம்

மணிமேகலை பிரசுரத்தின் ரவி தமிழ்வாணனுக்கு சிறந்த பதிப்பாசிரியர் விருது

  • சென்னை புத்தகக் கண்காட்சி துவக்கக் விழாவில், சிறந்த பதிப்பாசிரியருக்கான விருது, பிரபல மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ் வாணனுக்கு வழங்கினார் தமிழக முதல்வர்

உலகம்

உலகின் மிகுந்த மாசுபட்ட நதி – பாகிஸ்தானின் ராவி நதி

  • அமெரிக்காவை சேர்ந்த யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகில் உள்ள 104 நாடுகளில் உள்ள 258 நதிகளில் உள்ள 1052 நீர் ஆற்று பகுதிகளை கண்காணித்ததில், உலகில் மிகவும் மாசுபட்ட நதியாக பாகிஸ்தானின் ராவி நதி உள்ளதாக தெரிவித்துள்ளனர் // RAVI IN PAKISTAN IS THE MOST POLLUTED RIVER IN THE WORLD
  • அடுத்த இடத்தில பொலிவியா நாட்டின் பாஸ் நதி உள்ளது.

முதன் முதல்

ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி இல் இருந்து குணமான முதல் பெண்மணி

  • அமெரிக்க பெண் ஒருவர் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது // FIRST WOMAN REPORTED TO BE CURED OF HIV AFTER STEM CELL TRANSPLANT
  • நியூயார்க் நோயாளி என்று அழைக்கப்படும் பெண், ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எச்.ஐ.வி நோயால் குணப்படுத்தப்பட்ட உலகில் முதல் பெண்மணி மற்றும் மூன்றாவது நபர் ஆவார்.

இந்தியாவின் முதல் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்

  • நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியாவின் முதல் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக வைஸ் அட்மிரல் (ஓய்வு) ஜி அசோக் குமாரை அரசாங்கம் நியமித்துள்ளது // THE GOVERNMENT HAS APPOINTED VICE ADMIRAL (RETD) G ASHOK KUMAR AS INDIA’S FIRST NATIONAL MARITIME SECURITY COORDINATOR TO STRENGTHEN THE COUNTRY’S MARITIME SECURITY.
  • இவர் முன்னாள் கடற்படை துணைத்தலைவர்.
  • NSA அஜித் தோவல் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துடன் NMSC ஒருங்கிணைந்து செயல்படும்.

முதல் ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டம்

  • முதல் ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார் // NIRMALA SITHARAMAN PARTICIPATES IN FIRST G20 FINANCE MINISTERS MEETING
  • 17 பிப்ரவரி 22 அன்று இந்தோனேசியாவின் G20 பிரசிடென்சியின் கீழ் முதல் G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

இராணுவம்

வங்கதேசம், அமெரிக்க விமானப் படைகளின் “கோப் சவுத் 22” போர் பயிற்சி நிகழ்ச்சி

  • பங்களாதேஷ் மற்றும் அமெரிக்காவின் விமானப்படைகள் பிப்ரவரி 20, 2022 முதல் கூட்டு தந்திரோபாய விமானப் பயிற்சியான ‘கோப் சவுத் 22’ ஐ நடத்தும் // THE AIR FORCES OF BANGLADESH AND THE UNITED STATES WILL CONDUCT A JOINT TACTICAL AIRLIFT EXERCISE ‘COPE SOUTH 22’ FROM FEBRUARY 20,
  • இருதரப்பு பயிற்சி பங்களாதேஷ் விமானப்படை (BAF) குர்மிடோலா கண்டோன்மென்ட், டாக்காவில் நடைபெறும்

அறிவியல், தொழில்நுட்பம்

புளூட்டோவின் வளிமண்டல அழுத்தத்தின் துல்லியமான மதிப்பு கண்டுபிடிப்பு

  • இந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பாளர்கள் உட்பட விஞ்ஞானிகள் குழு புளூட்டோவின் வளிமண்டல அழுத்தத்தின் துல்லியமான மதிப்பை அதன் மேற்பரப்பில் பெற்றுள்ளது // A TEAM OF SCIENTISTS, INCLUDING INDIAN AND INTERNATIONAL COLLABORATORS, HAVE DERIVED THE ACCURATE VALUE OF PLUTO’S ATMOSPHERIC PRESSURE AT ITS SURFACE.
  • இது பூமியின் சராசரி கடல் மட்டத்தில் உள்ள வளிமண்டல அழுத்தத்தை விட 80,000 மடங்கு குறைவாக உள்ளது.
  • 6-மீ தேவஸ்தல் ஆப்டிகல் தொலைநோக்கி (DOT) (இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கி) பயன்படுத்தி பெறப்பட்ட தரவுகளிலிருந்து அழுத்தம் கணக்கிடப்பட்டது.

திட்டம்

அணைத்து கிராமங்களின் டிஜிட்டல் வரைப்படம் – “ஸ்வம்த்வா” திட்டம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEB 17

  • இந்தியாவில் உள்ள சுமார் 6 லட்சம் கிராமங்கள், 100 முக்கிய நகரங்களின் டிஜிட்டல் வரைப்படங்களை உருவாக்கும் “ஸ்வம்த்வா” திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
  • SVAMITVA = SURVEY OF VILLAGES AND MAPPING WITH IMPROVISED TECHNOLOGY IN VILLAGE AREAS
  • டிரோன்கள் மூலமும் பல்வேறு கிராமங்கள் டிஜிட்டல் வரைபடமாக உருமாறி வருகின்றன.

புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEB 17

  • 2022-2027 காலகட்டத்திற்கான புதிய திட்டமான “புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம்” க்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது // GOVERNMENT HAS APPROVED A NEW SCHEME “NEW INDIA LITERACY PROGRAMME” FOR THE PERIOD 2022-2027.
  • தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் 2021-22 ஆகியவற்றுடன் இணைவதற்கு வயது வந்தோர் கல்வியின் அனைத்து அம்சங்களையும் இது உள்ளடக்கும்.
  • நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எழுத்தறிவு இல்லாதவர்களை இந்தத் திட்டம் உள்ளடக்கும்.

இடங்கள்

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பயோ-சிஎன்ஜி ஆலை இந்தூரில் அமைக்கப்பட உள்ளது

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEB 17

  • இந்தூரில் உள்ள சுமார் 400 பேருந்துகள் விரைவில் 19 பிப்ரவரி 2022 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் ஆலையில் கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் பயோ-சிஎன்ஜியில் இயங்கும் // LARGEST BIO-CNG PLANT IN SOUTH ASIA TO COME UP IN INDORE
  • 150 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனின் 15 ஏக்கர் அகழியில் இந்த ஆலை பொது-தனியார் கூட்டு (பிபிபி) முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பயோ-சிஎன்ஜி ஆலையாக இருக்கும்.

ஒப்பந்தம்

இந்தியா – யுஏஇ இடையே வரி விலக்கு வர்த்தக ஒப்பந்தம்

  • இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இடையே வரிவிலக்கு வர்த்தக ஒப்பந்தம், வரும் 18 ஆம் தேதி கையொப்பம் ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இந்த ஒப்பந்தம் படி, இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு சலுகைகள் வழங்கப்படும்.

நியமனம்

ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவில் இயக்குநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEB 17

  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது // THE CENTRAL GOVERNMENT HAS NOMINATED SANJAY MALHOTRA AS A DIRECTOR ON THE CENTRAL BOARD OF RESERVE BANK OF INDIA.
  • தற்போது நிதி சேவைகள் துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். அவரது நியமனம் பிப்ரவரி 16, 2022 முதல் அமலுக்கு வருகிறது.

 

 

Leave a Reply