TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 10/12/2022

Table of Contents

TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 10/12/2022

TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 10/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வணிக ஜெட் டெர்மினல் கேரளாவில் திறக்கப்பட்டது

TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 10/12/2022
இந்தியாவின் மிகப்பெரிய வணிக ஜெட் டெர்மினல் கேரளாவில் திறக்கப்பட்டது
  • கொச்சி சர்வதேச விமான நிலையம், நாட்டின் மிகப்பெரிய வணிக ஜெட் முனையத்தின் செயல்பாட்டைத் தொடங்கியது // The Cochin International Airport started operations of the country’s largest business jet terminal
  • 40,000 சதுர அடி பரப்பளவில் இந்த முனையம் திறக்கப்படுவதன் மூலம், தனியார் ஜெட் டெர்மினல்களை இயக்கும் நாட்டின் நான்கு விமான நிலையங்களில் ஒன்றாக கொச்சி சர்வதேச விமான நிலையம் மாறும்.

2011 முதல் இந்திய குடியுரிமையை கைவிட்டவர்கள்

  • இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2022 இல் 1,83,741 பேர் உட்பட 2011 முதல் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டனர்.
  • 2011 முதல் இந்திய குடியுரிமையை கைவிட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 16,21,561 ஆக உள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தெலுங்கானாவின் டி.ஆர்.எஸ் கட்சி இனி “பார்த்த ராஷ்டிர சமிதி” (பிஆர்எஸ்) கட்சி என அழைப்பு

  • தெலுங்கானாவின் டிஆர்எஸ் எனப்படும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி இனி “பார்த்த ராஷ்டிர சமிதி” (பிஆர்எஸ்) என அழைக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடாக மாறும் இந்தியா

  • இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வெப்பத்தில் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டதில் உலகில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 75% தொழிலாளர்கள் வெப்பம் சார்ந்த தொழிலையே செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 க்குள் காசநோயை ஒழிக்க திட்டம்

  • 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • உலகலாவியல் காசநோய் அறிக்கை 2022 படி இந்தியாவில் காசநோய் பாதிப்பு 18% குறைந்துள்ளது.

காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்

  • காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கார்பன் சமநிலை பகுதியாக மாற உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை

  • கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியை கார்பன் சமநிலை கொண்ட பகுதியாக மாற்ற தமிழக அரு முடிவு செய்து, அதற்கான ஆய்வுகளை மெட்ராஸ் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
  • அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.

6 பேருக்கு சமூக வெற்றியின் ராஜாக்கள் விருது

  • அரசியல், சமூக சேவை, இளைஞர் மேம்பாடு பிரிவில் = முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி
  • மருத்துவம், மக்கள் சேவை பிரிவில் = அப்பல்லோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி
  • அரசியல், கல்வி = டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர்
  • சமூக நலனுடன் சினிமா = இயக்குனர் கே.பாக்யராஜ்
  • சட்டம் சார்ந்த வேலை = வக்கீல் எஸ்.கே. வெர்மா
  • சமூக சேவை பிரிவில் = சமூக செயற்பாட்டாளர் டி.கந்தசாமி

பாரதி விருது

  • பாரதி ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டனுக்கு “பாரதி விருது” வழங்கப்பட உள்ளது.
  • இவ்விருதை மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பு வழங்குகிறது.

அனைவருக்கும் நல வாழ்வு திட்டத்தில் தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ சேவை வழங்கியதில் தமிழகம் முதலிடம்

  • அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
  • உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற “சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாட்டில்” இவ்விருது தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் துணைத் தலைவர்

  • நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லாவை (54) மார்ச் 2023 முதல் வங்கியின் முதல் துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக நியமித்துள்ளது.
  • சொத்துக்கள் மற்றும் செயல்பாட்டின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இது மிகப்பெரிய ரிசர்வ் வங்கியாகும்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்தவர் இஷான் கிஷன்

TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 10/12/2022
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்தவர் இஷான் கிஷன்
  • தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் ஒருநாள் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.
  • வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
  • இதற்கு முன்பு 2015ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 138 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனை படைத்திருந்தார்.
  • ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 7வது வீரர் இஷான். இரட்டை சதம் அடித்த 4 வது இந்திய வீரர் இவராவார்.
  • மிக குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்தவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் இஷான்.
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இது 9 வது இரட்டை சதம் ஆகும்.
  • இந்தியாவின் ரோகித் ஷர்மா மூன்று முறை இரட்டை சதங்களை அடித்துள்ளார்.

BWF உலக டூர் இறுதிப் போட்டியில் HS பிரணாய் விக்டர்

  • பாட்மிண்டன் BWF உலக டூர் போட்டிகள் நடைபெற்ற இடம் = பாங்காக், தாய்லாந்து
  • இந்தியாவின் ஹெச்எஸ் பிரணாய் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான விக்டர் ஆக்செல்சனை 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மார்ஸ்: மீத்தேன் எச்சரிக்கை மற்றும் மறுமொழி அமைப்பு

  • எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் 27வது கட்சிகளின் மாநாட்டில் (COP27) MARS தொடங்கப்பட்டது.
  • MARS: Methane Alert and Response System
  • சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகம் (IMEO) MARS ஐ COP27 மாநாட்டில் துவக்கியது.

இந்தியாவில் தவறான தகவல்களுக்கு எதிரான பிரச்சாரத்தை கூகுள் தொடங்கியுள்ளது

  • கூகுளின் ஜிக்சா துணை நிறுவனம், டிச’22ல் இந்தியாவில் தவறான தகவல் எதிர்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது // Google launches anti-misinformation campaign in India
  • வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட தவறான தகவல்களைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நோபல் பரிசு தினம்

TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 10/12/2022
நோபல் பரிசு தினம்
  • நோபல் பரிசு தினம் (NOBEL PRIZE DAY) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது
  • இந்த நாள் ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பாளரும் டைனமைட்டைக் கண்டுபிடித்த அறிஞருமான ஆல்பிரட் நோபலின் நினைவு நாளைக் குறிக்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி நோபல் பரிசு வழங்கும் விழா ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெறும்.
  • 10 டிசம்பர் 1901 இல், முதல் நோபல் பரிசுகள் இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றில் வழங்கப்பட்டன.

சர்வதேச விலங்கு உரிமைகள் தினம்

TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 10/12/2022
சர்வதேச விலங்கு உரிமைகள் தினம்
  • சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் (INTERNATIONAL ANIMAL RIGHTS DAY) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • விலங்கு உரிமைகள் சங்கம், Uncaged 1998 இல் சர்வதேச விலங்கு உரிமைகள் தினத்தை உருவாக்கியது. Uncaged அதன் தலைமையகம் இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் உள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினம்

  • சர்வதேச மனித உரிமைகள் தினம் (INTERNATIONAL HUMAN RIGHTS DAY) 2021 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1948 இல், UN பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (UDHR) ஏற்றுக்கொண்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் = அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி (Dignity, Freedom and Justice for All)

உலகளாவிய சிறுபான்மை குறியீடு

  • உலகளாவிய சிறுபான்மை அறிக்கையில் “உலகளாவிய சிறுபான்மை குறியீட்டில்” 110 நாடுகளில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்தது.
  • பாட்னாவில் உள்ள Centre for Policy Analysis (சிபிஏ) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகியவை பட்டியலில் கடைசி இடத்திலும், இங்கிலாந்து 54வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 61வது இடத்திலும் உள்ளன.

உலகளாவிய 500 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது

  • இந்தியா 9 நிறுவனங்களை இப்பட்டியலில் புதிதாக சேர்த்துள்ளது.
  • உலகின் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் = 20 வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா
  • ஹுருன் குளோபல் 500 தரவரிசையில் = 5 வது இடத்தை பிடித்துள்ளது.
  • இந்திய அளவில் முதல் திதி ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
  • புதிதாக நுழைந்த 9 நிறுவனங்களில் நான்கு நிறுவனம் அதானி குழுமத்தை சார்ந்தது.

உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு COP-15

  • COP-15, உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்ற இடம் = மாண்ட்ரியல், கனடா // United Nations Convention on Biological Diversity, also called as Conference of Parties (COP-15)
  • இது COP15 இன் இரண்டாம் பகுதி. முதல் பகுதி 18 ஆகஸ்ட் 2021 அன்று சீனாவால் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இரண்டாவது பகுதி நேருக்கு நேர் மாநாட்டில் நடத்தப்பட இருந்தது, ஆனால் அது சீனாவிலிருந்து கனடாவுக்கு மாற்றப்பட்டது.

ஜி20 மேம்பாட்டு பணிக்குழு கூட்டம்

  • ஜி20 மேம்பாட்டு பணிக்குழு கூட்டம் (G20 Development Working Group) நடைபெற உள்ள இடம் = மும்பை
  • முதல் G20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் (FCBD= first G20 Finance and Central Bank Deputies (FCBD) meeting) கூட்டம் நடைபெற உள்ள இடம் = பெங்களூரு
  • ஜி20 முதல் ஷெர்பா கூட்டம் நடைபெற்ற இடம் = ராஜஸ்தானின் உதய்பூர்

இந்தியா – அமெரிக்க பயங்கரவாத தடுப்பு செயற்குழு கூட்டம்

  • இந்தியா – அமெரிக்க பயங்கரவாத தடுப்பு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள இடம் = புதுதில்லி
  • பிராந்திய, சர்வதேச பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது தொடர்பான கூட்டம் இது.

COP27 உள்ளூர் தழுவல் சாம்பியன்ஸ் விருது

  • எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்து வரும் COP27 இல் குளோபல் சென்டர் ஆன் அடாப்டேஷன் (GCA = Global Center on Adaptation) ஏற்பாடு செய்த “உள்ளூர் தழுவல் சாம்பியன்ஸ் விருது // லோக்கல் அடாப்டேஷன் சாம்பியன்ஸ் விருதுக்கு” (Local Adaptation Champions Awards) மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட ஸ்வயம் ஷிக்ஷன் பிரயோக் (SSP) அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குனர்

  • தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (National Dairy Development Board (NDDB)) புதிய நிர்வாக இயக்குனர் = மீனேஷ் சி ஷா
  • இதன் தலைமையகம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ளது.

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவர்

  • இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவர் = மேக்னா சவுதாலா
  • இந்தியாவின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக மேக்னா சவுதாலா பதவியேற்றுள்ளார்.
  • எட்டு முறை தேசிய சாம்பியனான கமலேஷ் மேத்தா TTFI இன் புதிய பொதுச் செயலாளராகவும், படேல் நாகேந்தர் ரெட்டி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 09/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 08/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 07/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 06/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 05/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 04/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 03/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 02/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 01/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 04/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 03/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 02/12/2022
  • TOP CURRENT AFFAIRS TODAY TAMIL 01/12/2022

Leave a Reply