சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவாரூர் நான்மணிமாலை

திருவாரூர் நான்மணிமாலை

என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம்
புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தார் என்றுருகு வார்.
– குமரகுருபரர்

சொற்பொருள்:

 • என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த
 • தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர்
 • பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர்
 • புண்ணியனார் – இறைவன்

ஆசிரியர் குறிப்பு:

 • ஆசிரியர்: குமரகுருபரர்
 • பெற்றோர்: சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமசுந்தரி அம்மையார்
 • ஊர்: திருவைகுண்டம்

இயற்றிய நூல்கள்:

 • நீதிநெறிவிளக்கம், முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ், கந்தர்கலி வெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம்.

காலம்:

 • கி.பி.பதினாறாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

 • திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை.
 • இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும். நான்மணிமாலை என்பது தமிழில் வழங்கும் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆனா மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனா நாற்பது செய்யுள்களை கொண்டது.

Leave a Comment

Your email address will not be published.