ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.
இளமைக்காலம்:
ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர்.
இவரின் தந்தை = திருவேங்கடம்
இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.
புதுவைக்கு செல்லுதல்:
இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.
அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
துபாசி:
ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
“துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு:
ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
தம் நாட்குறிப்புக்கு “தினப்படிச் செய்திக்குறிப்பு”, “சொஸ்த லிகிதம்” எனப் பெயரிட்டார்.
வரலாற்றுச் செய்திகள்:
பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
வணிகச் செய்தி:
துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்து போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் ஒளவும், தேவாமிர்த்ததைச் சுவைத்துபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார்.
தண்டனைச் செய்தி:
நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிகப்படுள்ளது.
பண்பாட்டு நிலை:
ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.
ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்:
முசபர்சங், ஆனந்தரங்கருக்கு மூவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு “மண்சுபேதார்” என்னும் பட்டம் வழங்கினார்.
பின்பு செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், பின்பு அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார்.
ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.
பெப்பிசு:
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி = பெப்பிசு