10th Samacheer Kalvi History Study Material in Tamil – 1

ஏகாதிபத்தியம்

 • ஏகாதிபத்தியம் என்ற சொல் Imperium என்ற லத்தின் சொல்லிருந்து வந்தது. இதன் பொருள் ஆதிக்கம் (Power) என்பதாகும்.
 • கி.பி. 1492 ம் ஆண்டு முதல் கி.பி. 1763 ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை காலனி ஆதிக்கம் என அழைக்கப்படுகிறது.
 • ஏகாதிபத்தியம் என்பது கொள்கை, காலனி ஆதிக்கம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதிக்கமாகும்.
 • இத்தாலி மற்றும் ஜெர்மனியின் ஒருங்கிணைப்பிற்குப் பிறகு, அந்நாடுகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் தங்களின் ஆதிகத்தை நிலைநாட்ட முயற்சித்தனர்.
 • கி.பி. 1870 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை புதிய ஏகாதிபத்தியம் என அழைக்கப்பட்டது.
 • இரயில்வே துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் மூலை பொருட்களை தொழிற்சாலைக்களுக்கும், விற்பனை பொருட்களைச் சந்தைக்கும் விரைவாக எடுத்துச் செல்ல பேருதவி புரிந்தது.
 • ஆசியா மற்றும் ஆப்ரிக்கக் குடியேற்ற நாடுகள் நல்ல சந்தைகளாகவும் மூலப்பொருள்களை அழிக்கும் இடங்களாகவும் செயல்பட்டனர்.
 • துருக்கியில் நீண்ட இரயில் பாதை அமைக்கும் பிரத்தியேக உரிமையை ஜெர்மனியச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொறியாளர்கள்கள் குழு பெற்றிருந்தது.
 • ஜெர்மானியப் பேரரசு சீனாவிடமிருந்து ஷாண்டுங் தீபகற்பத்தின் மீது 99 ஆண்டுக்கான குத்தகை உரிமம் பெற்றிருந்தது.
 • 1907 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் ரஷ்யா, பாரசீக நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன ஐரோப்பிய நாடுகள் சீனாயிலும் இதே வழிமுறையே பின்பற்றின.
 • 1912 ஆம் ஆண்டு பிரான்ஸ் மொராக்கோ மீது தனது பாதுகாப்பை நிலைநாட்டியது.
 • முதலாம் உலகப்போருக்கு முன் துருக்கியில் அனைத்துப் பொருளாதார அமைப்புகளும், ஆட்டோமான் பொது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிர்வாகத்திலிருந்த அனைவருமே ஐரோப்பிய அதிகாரிகள் ஆவர்.
 • ஆங்கிலக் கிழங்கத்திய வணிகக்குழு கி.பி. 1600 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்டது.
 • அது பின்னர் இந்தியாவில் அப்போது ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதி பெற்று சூரத்தில் தனது வியாபாரத் தளத்தை ஏற்படுத்தியது.
 • கி.பி. 1664ல் பிரெஞ்ச் கிழக்கந்திய வணிகக் குழு பதினான்காம் லூயியின் அமைச்சராக விளங்கிய கால்பெர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
 • பிரான்சு – இங்கிலாந்து இடையே பகைசுமையை உருவாக்கியது. இதன் காரணமாக கர்நாடகப் போர்கள் ஏற்பட்டன.
 • ஆங்கிலேயேர்கள் கொண்டு வந்த வரியில்லா வணிகம் என்னும் முறைக்கு, வங்கால நவாப் சீராஜ் உத் தௌலா எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவின் தலைமையில் பிளாசிப்போர் ஏற்படக் காரணமாயிற்று.
 • கிழக்கந்திய வணிகக்குழு பக்சார் போருக்குப் (கி.பி. 1764) பிறகு வங்காளத்தை ஆளும் தனி உரிமையை முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலமிடமிருந்து பெற்றது.
 • வெல்லெஸ்லி பிரபு தனது துணைப்படைத் திட்டத்தின் மூலமும், டல்ஹௌசி தனது வாரிசு இழப்புக் கொள்கை மூலமும், கிழக்கிந்திய வாணிகக் குழுவின் ஆட்சியை விரிவுப்படுத்தினர்.
 • ஆங்கிலேயேர்கள் சீனாமீது 1840 ல் போர் தொடுத்தனர்.
 • இதுவே முதலாம் அபினிப்போர் என அழைக்கப்பட்டது.
 • இப்போரில் சீனா தோற்கடிக்கப்பட்டு கி.பி. 1842 ல் நான்கிங் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி சீனா ஹாங்காங் தீவை நிரந்திரமாக இங்கிலாந்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது.
 • 1854 ஆம் ஆண்டு மஞ்ச் அரசுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் எதிராக சீனர்கள் கலகத்தில் இடுப்பட்டனர். இக்கழகம் தைப்பிங் கலகம்  என்றழைக்கப்பட்டது.
 • ஆங்கில மற்றும் பிரெஞ்சுப் படைகள் காண்டன் துறைமுகத்தை தாக்கிக் கைப்பற்றினர் இது இரண்டாவது அபினிப் போர் என்று அழைக்கப்படுகிறது. இதில் சீனர்களின் தோல்வி கி.பி. 1860 ல் பீகிங் உடன்படிக்கை ஏற்படக் காரணமாயிற்று இவ்வுடன்படிக்கையின் மூலம் ஆங்கிலேயர்கள் கௌலூன் துறைமுகத்தை பெற்றனர்.
 • 1894 ம் ஆண்டு நடைபெற்ற சீனா – ஜப்பானியப் போரில் படுதோல்வியடைந்தன் காரணமாக, சீனா ஃபார்மோசாத் தீவை ஜப்பானியர்களிடம் ஒப்படைத்தது.
 • பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் சீனப் பேரரசி தவோகர் சீன அரசின் மீது கோபமுற்ற சீன இளைஞர்கள் பேரரசி தவோகரின் ஷண்டுதலின் படி ஆங்கில, பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய குடியேற்றங்களையும், கிறிஸ்துவர்களையும் 1899 ம் தாக்கினார்கள். இது பாக்சர் புரட்சி என்று அழைக்கப்பட்டது.
 • அமெரிக்காவும் இங்கிலாந்தும், சீனாவில் திறந்த வெளிக் கொள்கையை  உருவாக்கினர் 1911 ஆம் ஆண்டு புரட்சிக் வித்திட்டு, சீனா குடியரசு நாடாக டாக்டர். சன்யார்ட் சென்னின் தலைமையில் உருவாகக் காரணமாக அமைந்தது.

 

Leave a Comment

Your email address will not be published.