11TH TAMIL இசைத்தமிழர் இருவர்

Table of Contents

11TH TAMIL இசைத்தமிழர் இருவர்

11TH TAMIL இசைத்தமிழர் இருவர்

  • இசை! கலைகளின் மகுடம்! உணர்வுகளின் வினையூக்கி.
  • இசை, குருதியைச் சூடேற்றும்; உயிரை உருக்கும்; ஆழ்கடல் அமைதியாய் மனத்தை உறங்க வைக்கும்.
  • இரசனையின் முகவரிக்கு இசைமொழியில் கடிதமெழுதும் காற்றின் கவிஞர்களே இசைக்கலைஞர்கள்.
  • தமிழகத்தின் காட்டிலும் மேட்டிலும் வயல் சேற்றிலும் தவழ்ந்த இசையைச் சீராட்டி, மெருகூட்டி உலகுக்குத் தந்து மகிழ்ந்தவர் இருவர்.
  • இவ்விருவரும் உலக இசைப்பேரேட்டின் தமிழகத்து முத்திரைகள்;
  • அவர்கள், சிம்பொனித் தமிழர் இளையராஜா, ஆஸ்கர் தமிழர் ஏ.ஆர். இரகுமான் ஆகியோர் ஆவர்.

சிம்பொனித் தமிழர்

11TH TAMIL இசைத்தமிழர் இருவர்
11TH TAMIL இசைத்தமிழர் இருவர்
  • சிம்பொனித் தமிழர் என அழைக்கப்படுபவர் = இசைஞானி இளையராஜா
  • ராயல் ஃபில் ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு, சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக்காட்டியவர் = இசைமேதை (மாஸ்ட்ரோ) இளையராஜா.
  • மாஸ்ட்ரோ என்பதன் பொருள் = இசைமேதை

இளையராஜா வாழ்க்கை குறிப்பு

  • இளையராஜாவின் சொந்த ஊர் = தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம்
  • இயற் பெயர் = இராசையா
  • தாய் பாடும் தாலாட்டில் தொடங்கித் தமிழ்நாட்டின் அனைத்து இசை வடிவங்களையும் அசைபோட்டு வளர்ந்த தமிழினத்தின் பெருமைக்குரிய இசை மேதை அவர்.

இளையராஜாவின் முதல் படம்

  • இளையராஜா முதன் முதலாக இசை அமைத்த படம் = அன்னக்கிளி
  • பழந்தமிழ் இசையையும் உழைக்கும் மக்களின் துள்ளல் இசையையும் மனத்தை மயக்கும் வகையில் கலந்து தந்தார்.
  • இவர், திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர்.

சமூக மாற்றங்களின் குறியீடு

  • எழுபது, எண்பதுகளில் மெல்லத் தோன்றிப் புது வேகம்கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது.
  • பின்னணி இசையிலும் பாடல் இசையிலும் விடுபட்டுப்போன வாய்மொழித் தன்மை, யதார்த்தம் ஆகியன பொதிந்த அவருடைய இசை, சாமானியரையும் ஈர்த்தது
  • அவர்களது வாழ்வின் தருணங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதோடு அமைப்புக்கு அப்பாற்பட்ட இசை இயக்கமாகவும் மாறியது.

இசையுடன் மக்கள் ஒன்றுதல்

  • ஜம்மு, காஷ்மீரின் பஹார் இன மக்களின் நாட்டுப்புற இசையில் புல்லாங்குழலில் வழிந்தோடும் பஹாடி முதல் மதுரை மக்களின் கிராமிய இசையிலிருந்து முகிழ்த்துச் செவ்வியல் இசையில் கோலோச்சும் ஆனந்தபைரவி (அன்னக்கிளி உன்னைத் தேடுதே) வரை அவரின் இசையில் பண்கள் இழையோடுகின்றன.
  • எம்மொழியில் இசையமைத்தாலும், அவர் அம்மண் மணத்துடன் தம்மை இணைத்து இசையமைப்பதே, மக்கள் அவருடைய இசையில் ஒன்றுவதற்குக் காரணமாகும்.

இளையராஜா பெற்ற விருதுகள்

11TH TAMIL இசைத்தமிழர் இருவர்
11TH TAMIL இசைத்தமிழர் இருவர்
  • இந்திய அரசு – பத்ம விபூஷண் விருது
  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது
  • சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
  • தமிழ்நாடு – கலைமாமணி விருது
  • மத்தியப்பிரதேசம் – லதா மங்கேஷ்கர் விருது
  • கேரளம் – நிஷாகந்தி சங்கீத விருது

இளையராஜாவின் இசைத் தொகுப்புகள்

  • இளையராஜாவின் இசைத் தொகுப்புகளாவன,
    • எப்படிப் பெயரிடுவேன்? (HOW TO NAME IT?)
    • புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்ட ‘காற்றைத் தவிர ஏதுமில்லை ‘ (NOTHING BUT WIND)

மனித உணர்வுகளுக்கு இசைவடிவம் கொடுத்தவர்

  • மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் கொடுத்தவர் = இளையராஜா
  • மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை ‘இந்தியா 24 மணிநேரம் (INDIA 24 HOURS)” என்னும் ஆவணக் குறும்படத்தின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார்.

மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு இசையமைத்தல்

  • மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோரியோ (0ratorio) என்னும் இசை வடிவில் இசையமைத்துள்ளார்.
  • ‘இராஜாவின் ரமணமாலை’, ‘இளையராஜாவின் கீதாஞ்சலி’ என்னும் தமிழ் இசைத்தொகுப்புகளையும் கன்னட மொழியில் ‘மூகாம்பிகை’ என்ற பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார்.
  • அத்துடன் ஆதிசங்கரர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்திப்பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் பஞ்சமுகி

  • பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவ்வியல் இராகம் இளையராஜா உருவாக்கியதாகும்.

நாட்டுப்புற இசை வடிவம்

  • தமிழகத்தின் நாட்டுப்புற இசை வடிவத்தைத் திரையிசையில் தவழ விட்டவராகவே இசைஞானி இளையராஜா அறியப்படுகிறார்.
  • ஆனால், மேற்கத்திய இசையை முறைப்படி பயின்ற காரணத்தால் நாட்டுப்புற இசையின் செவ்வியல் தன்மைகளோடு மேற்கத்திய இசையைக் கலந்து உலவவிட்டார்.

இளையராஜாவின் சிறப்புகள்

  • நாட்டுப்புறப் பாடலுக்குக் கர்நாடக இசை வடிவமும்
  • கல்யாணி இராகத்தின் ஆரோகண சுரங்களைக்கொண்டே (ஏறுவரிசைச் சுரங்கள்) ‘கலைவாணியே உனைத்தானே’ என்னும் பாடலுக்கு மெட்டமைத்திருக்கிறார்.
  • மூன்றே மூன்று சுரங்களைக்கொண்டு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசையமைத்தும் இருக்கிறார்
  • நான்கே இசைக்கருவிகளைக் கொண்டு ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.
  • முழுத் திரைப்படத்துக்கும் அரை நாளில் பின்னணி இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார் (நூறாவது நாள்).
  • பிற நாட்டின் இசைவடிவத்தை நம் மண்ணுக்கேற்ற வகையில் மாற்றம் செய்வதோடு திரைப்படப் பின்னணி இசைக்கோவையைக் கூட உணர்வின் மொழியாக மாற்றித் தருவதே அவருடைய தனிச்சிறப்பாகும்.
  • தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என நம் நாட்டின் பிற மொழிப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார்.
  • இளையராஜா இசைக்கலைஞர் மட்டுமல்லர்; சிறந்த ஒளிப்படக் கலைஞர்; கவிஞர்; பாடகர்;
  • இளையராஜா எழுதிய நூல்கள் = ‘பால்நிலாப் பாதை’, ‘வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது’

காந்தி பாடலுக்கு இசை இமைத்தல்

  • மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடல் = “நம்ரதே கே சாகர்” என்னும் பாடல்
  • இப்பாடலுக்கு இசையமைத்து, இந்துஸ்தானி இசைப் பாடகர் அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவைத்து இசைக்கோவையை வெளியிட்டிருக்கிறார்.

மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவை

  • ஆசியாவிலேயே முதன்முதலில் சிம்பொனி (Symphony) என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர் இவரே.
  • சிம்பொனி இசைப் பணியை எழுதக் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும்
  • வெறும் பதின்மூன்று நாள்களில் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

சங்க இலக்கிய பண்கள்

  • பரிபாடலில் கூறப்பட்டுள்ள பண்கள் = நோதிறம், பாலையாழ், காந்தாரம்
  • சைவத் திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் பயன்படுத்திய பண்கள் = நட்டபாடை, இந்தளம்

தேவாரப் பண்கள்

  • தேவாரத்தில் 23 பண்களில் பாடல்கள் உள்ளன.
  • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் = சாளரபாணி

நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

  • தேவாரத்தில் இல்லாது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் = நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம்

ஆஸ்கர் தமிழர்

11TH TAMIL இசைத்தமிழர் இருவர்
11TH TAMIL இசைத்தமிழர் இருவர்
  • 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான விருதை பெற்றவர் = ஏ.ஆர்.இரகுமான்.
  • 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரையிசைப் பாடலுக்கான விருது பெற்றவர் = ஏ.ஆர்.இரகுமான்
  • இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஒரே தமிழர்

இசைப்புயல் ஏ ஆர் இரகுமான்

  • விருது விழாவில் உறை நிகழ்த்திய பொழுது, இறுதியாக தமிழில் தமது உரையை நிறைவு செய்தவர்.
  • “இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

ஏ ஆர் ரகுமான் வாழ்க்கை குறிப்பு

  • இவரின் தந்தை = ஆர்.கே.சேகர்
  • இவரின் தந்தை மலையாள திரைப்பட உலகின் பிரபலமாக விளங்கிய இசைக்கலைஞர் ஆவார்.
  • ஏ.ஆர். இரகுமான் நான்கு வயதிலேயே ஹார்மோனியம் இசைக்கும் திறமை பெற்றிருந்தார்.
  • இளம் வயதிலேயே தந்தையை இழந்தார்.
  • இவரின் பள்ளிப்படிப்பு 11 ஆம் வகுப்புடன் முடிவுக்கு வந்தது.

ஏ ஆர் இரகுமானின் முதல் படம்

  • 1992 ஆம் ஆண்டு “ரோஜா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
  • தன் முதல் படத்திலேயே இசைக்கான தேசிய விருதை பெற்ற முதல் இசையமைப்பாளர் இவராவார்.

கலிப்பா ஓசை

  • தமிழ் யாப்பிலக்கணத்தின் நால்வகைப் பாக்களில் ஒன்று = துள்ளல் ஓசை
  • இந்த துள்ளல் ஓசைக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.

உலகத் தரத்தில் இசையமைத்தல்

  • நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இவற்றுடன் மேற்கத்திய, உலகளாவிய இசை முறைகளையும் கலந்து, புதிய கணினித் தொழில்நுட்ப உதவியுடன் உலகத்தரத்தில் இசையமைத்ததுடன் பல இளம் பாடகர்களையும் அறிமுகம் செய்தார்.

தாளம் உருவாக்கும் முறை

  • இரகுமானிடம் எல்லோரும் இரசித்துக் கேட்பது அவரின் ‘தாளம் உருவாக்கும் முறை’.
  • ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்குமுன் அதற்கான தாளத்தைத்தான் முதலில் உருவாக்குவார்.
  • பாடலுக்கான சூழலை மனத்தில் உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ற தாளக்கட்டை உருவாக்கி அதனுள் அமிழ்ந்திருக்கும் பாடலுக்கான மெட்டை வெளிக்கொணர்வார்.

நாட்டுப்பற்று உணர்வை ஊட்டுதல்

  • இவர் இசையமைத்த “வந்தே மாதரம்”, “ஜன கண மன” என்னும் இசைத்தொகுதிகள், நவீன இசை வடிவில் நாட்டுப்பற்று உணர்வை மிளிரச் செய்தன.
  • மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இசையமைத்ததோடு இந்தித் திரைப்பட உலகத்திலும் தம் இசை முத்திரையைப் பதித்தார்.

சூஃபி இசையை அறிமுகம் செய்தவர்

  • வெவ்வேறு கலாச்சார மக்களையும் தம் இசையால் ஒருங்கிணைத்ததுடன் திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்திய சிறப்பும் இவருக்குண்டு.

கோல்டன் குளோப் விருது

  • “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற திரைப்படத்தின் இசைக்காக, ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றதன் மூலம் உலகளாவிய புகழ் பெற்றார்.
  • கோல்டன் குளோப் விருதை பெற்ற முதல் இந்தியர = ஏ.ஆர்.இரகுமான் ஆவார்.

ஏ ஆர் இரகுமான் பெற்ற விருதுகள்

11TH TAMIL இசைத்தமிழர் இருவர்
11TH TAMIL இசைத்தமிழர் இருவர்

இந்திய அரசு

பத்ம பூஷண் விருது
தமிழ்நாடு

கலைமாமணி விருது

கேரளம்

தங்கப் பதக்கம்
உத்திரப்பிரதேசம்

“ஆவாத் சம்மான்” விருது

மத்தியப்பிரதேசம்

“லதா மங்கேஷ்கர்” விருது
மொரீஷியஸ்

தேசிய இசை விருது

மலேசியா

தேசிய இசை விருது
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

சர்வதேச இசை விருது

பிங்கல நிகண்டு

  • பிங்கல நிகண்டு என்னும் நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன.
  • பாடும் காலங்களுக்கு ஏற்றவாறு பண்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன = மூன்று.
  • பாடும் காலங்களுக்கு ஏற்றவாறு பண்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள நூல் = பிங்கல நிகண்டு.
  • பண்கள், பாடும் காலங்களுக்கு ஏற்றவாறு பகல் பண், இரவுப் பண், பொதுப் பண் என்று மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன.

 

 

Leave a Reply