11TH TAMIL அகநானூறு
11TH TAMIL அகநானூறு
- சொல்ல வந்த கருத்தை ‘உள்ளுறை’, ‘இறைச்சி‘ வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு.
- அதனைப் பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவதோடு மரபின் நாகரிகம் குறைவு படாது கூறவும் வேண்டும்.
- அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும்.
- தோழியின் பொறுப்பு = தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தைப் பற்றிய குறிப்பைப் பொதிந்து வெளியிடுதல்.
அருஞ்சொற்பொருள்
- கொண்மூ – மேகம்
- விசும்பு – வானம்
- சமம் – போர்
- அரவம் – ஆரவாரம்
- ஆயம் – சுற்றம்
- தழலை, தட்டை – பறவைகளை ஓட்டும் கருவிகள்.
இலக்கணக்குறிப்பு
- வளைஇ, அசைஇ = சொல்லிசை அளபெடைகள்
- அறன், திறன் = ஈற்றுப்போலிகள்
- பிழையா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அருஞ்சமம் = பண்புத்தொகை
- எறிவாள் = வினைத்தொகை
அகநானூறு நூல் குறிப்பு
- அகநானூறு 145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு.
- இது, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- இந்நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு.
- இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.
- வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
-
அகநானூறு நூல் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
அகநானூறு நூல் தொகுப்பு
திணை |
பாடல் வரிசை | எண்ணிக்கை |
பாலை | 1, 3, 5, 7, 9, 11,…… |
200 |
குறிஞ்சி |
2, 8, 12, 18, 22, 28, ……. | 80 |
முல்லை | 4, 14, 24, 34, …… |
40 |
மருதம் |
6, 16, 26, 36, ….. | 40 |
நெய்தல் | 10, 20, 30, 40, ……. |
40 |
முதற்பொருளும் உரிப்பொருளும்
திணை |
நிலம் | பெரும்பொழுது | சிறுபொழுது | உரிப்பொருள் |
குறுஞ்சி | மலையும் மலை சார்ந்த இடமும் | கூதிர், முன்பனி | யாமம் |
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் |
முல்லை |
காடும் காடு சார்ந்த இடமும் | கார் | மாலை | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் |
மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் | ஆறு பெரும் பொழுதுகள் | வைகறை |
ஊடலும் ஊடல் நிமித்தமும் |
நெய்தல் |
கடலும் கடல் சார்ந்த இடமும் | ஆறு பெரும் பொழுதுகள் | ஏற்பாடு | இரங்கலும் இரங்கல் நிமித்தமும் |
பாலை | சுரமும் சுரம் சார்ந்த இடமும் | இளவேனில், முதுவேனில் | நண்பகல் |
பிரிதலும் பிரிதல் நிமித்தமும் |
கருப்பொருள்
நிலம் |
குறுஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
தெய்வம் | சேயோன் | மாயோன் | வேந்தன் | வருணன் |
கொற்றவை |
மக்கள் |
பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடுச்சி | குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி | ஊரன், மகிழ்நன், மனைவி | சேர்ப்பன், புலம்பன் | விடலை, மீளி, எயிற்றி |
குறவர். குறத்தியர், கானவர் | இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் | உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் | நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர் |
எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் |
|
புள் (பறவை) |
கிளி, மயில் | காட்டுக்கோழி | நாரை, மகன்றில், அன்னம் | கடற்காகம் | புறா, பருந்து, கழுகு |
விலங்கு | சிங்கம், புலி, கரடி, யானை | மான், மயில் | எருமை, நீர்நாய் | சுறாமீன் |
செந்நாய் |
ஊர் |
சிறுகுடி | பாடி | பேரூர், மூதூர் | பாக்கம், பட்டினம் | குறும்பு |
நீர் | அருவி நீர், சுனைநீர் | குறுஞ்சுனை, கானாறு | ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர் | உவர்நீர்க் கேணி, சுவர் நீர்க்கேணி |
நீரில்லாக் குழி, கிணறு |
பூ |
வேங்கை, காந்தள், குறுஞ்சி | முல்லை, பிடவம், தோன்றி | தாமரை, குவளை | நெய்தல், தாழை | குராஅம்பூ, மராம்பூ |
மரம் | சந்தானம், தேக்கு, அகில், மூங்கில் | கொன்றை, காயா, குருந்தம் | மருதம், வஞ்சி, காஞ்சி | புன்னை, ஞாழல் |
பாலை, உழிஞை, ஓமை |
உணவு |
மலைநெல், திணை, மூங்கிலரசி | வரகு, சாமை, முதிரை | செந்நெல், வெண்ணெல் | உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள் | வழியிற் பறித்த பொருள் |
பறை | தொண்டகப்பறை | ஏறுகோட்பறை | நெல்லரிகிணை, மணமுழவு | மீன்கோட்பறை, நாவாய்பம்பை |
துடி |
யாழ் |
குறுஞ்சியாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரியாழ் | பாலை யாழ் |
பண் | குறுஞ்சிப்பண் | சாதாரிப் பண் | மருதப் பண் | செவ்வழிப் பண் |
பஞ்சுரப் பண் |
தொழில் |
வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் | சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல் | வயலில் களை கட்டல், நெல்லரிதல் | உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல், உணக்கல் |
போர் செய்தல், சூறையாடல் |
- திருமலை முருகன் பள்ளு
- ஐங்குறுநூறு
- யானை டாக்டர்
- இலக்கணம் – புணர்ச்சி விதிகள்
- இலக்கணம் – மெய்ம்மயக்கம்
- சான்றோர் சித்திரம் – ஆபிரகாம் பண்டிதர்
- மலை இடப்பெயர்கள் – ஓர் ஆய்வு
- காவடிச்சிந்து
- குறுந்தொகை
- புறநானூறு
- வாடிவாசல்
- இலக்கணம் – பகுபத உறுப்புகள்
- சான்றோர் சித்திரம் – சி.வை.தாமோதரனார்
- சித்திரகவி
- திருக்குறள்
- தமிழக கல்வி வரலாறு