11TH TAMIL நிறுத்தக்குறிகள்
11TH TAMIL நிறுத்தக்குறிகள்
- படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தைக் காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும்.
- இவற்றுள் எந்தச் செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையடையாது.
முடிவுப்பகுதி அடையாளம் இடுதல்
- பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதியை எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் சுழியம் இடுதல் (0) அல்லது இணைக் கோடுகள் இடுதல் ( // ) அல்லது கோடு இடுதல் ( / ) என்னும் வழக்கம் இருந்துள்ளது.
நிறுத்தக்குறிகள்
- நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் = ஐரோப்பியர்கள்
- பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். தமிழ்மொழியின் இலக்கண நெறிகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திச் சொற்றொடர்களைப் பிரித்துப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நிறுத்தக்குறிகள் பயன்கள்
- நிறுத்தற் குறிகள், வெறும் அடையாளங்கள் அல்ல. அவை பொருள் பொதிந்தவை.
- மக்களது உணர்வின் இயக்கமாக விளங்குவது மொழி.
- மொழியின் தெளிவை உணர்த்த, நிறுத்தல்களும் குறியீடுகளும் அடையாளங்களாகும்.
- நிறுத்தற்குறிகள், ஒரு தொடரிலுள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும்.
- மொழியைத் தெளிவாகப் பேசவும் எழுதவும் நிறுத்தற்குறிகள் துணை நிற்கின்றன.
- நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது, தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும், கேட்பவர்களும் பயன்பெறுவர்.
நிறுத்தக்குறிகள் வகைகள்
- நிறுத்தக்குறிகளில் பல்வேறு வகையான குறிகள் உள்ளன. அவற்றில், சில
- காற்புள்ளி ( , )
- அரைப்புள்ளி ( ; )
- முக்காற்புள்ளி ( : )
- முற்றுப்புள்ளி ( . )
- வினாக்குறி ( ? )
- வியப்புக்குறி ( ! )
- விளிக்குறி ( ! )
- மேற்கோள்குறி
- ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
- இரட்டை மேற்கோள் குறி ( “ “ )
காற்புள்ளி என்றால் என்ன
- காற்புள்ளி ( , )
- பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.
காற்புள்ளி எடுத்துக்காட்டுகள்
- அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.
- நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.
- இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
- ஐயா; அம்மையீர்,
- சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை.
அரைப்புள்ளி என்றால் என்ன
- அரைப்புள்ளி (;)
- தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.
அரைப்புள்ளி எடுத்துக்காட்டுகள்
- வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
- சீர் – மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை ; ஒழுங்கு ; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு.
முக்காற்புள்ளி என்றால் என்ன
- முக்காற்புள்ளி ( : )
- சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.
முக்காற்புள்ளி எடுத்துக்காட்டுகள்
- சார்பெழுத்து :
- பத்துப்பாட்டு 2:246
- எட்டுத்தொகை என்பன வருமாறு:
முற்றுப்புள்ளி என்றால் என்ன
- முற்றுப்புள்ளி ( . )
- முற்றுப்புள்ளி வரும் இடங்களாவன,
- தொடரின் இறுதி
- முகவரி இறுதி
- சொற்குறுக்கம்
- நாள்
முற்றுப்புள்ளி எடுத்துக்காட்டுகள்
- உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
- தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
- தொல்.சொல்.58.
- 18/02/2018.
வினாக்குறி என்றால் என்ன
- வினாக்குறி ( ? )
- ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர் கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.
வினாக்குறி எடுத்துக்காட்டுகள்
- அது என்ன ? (முற்றுத்தொடர் )
- நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
வியப்புக்குறி என்றால் என்ன
- வியப்புக்குறி (!)
- வியப்புக்குறி , வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.
வியப்புக்குறி எடுத்துக்காட்டுகள்
- எவ்வளவு உயரமானது! (வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பு)
- என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர் (நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியில்)
- வா! வா! வா! போ! போ! போ! (அடுக்குச் சொற்களின் பின்)
விளிக்குறி என்றால் என்ன
- விளிக்குறி ( ! )
- அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும்.
- வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.
- எடுத்துக்காட்டுகள்
- அவையீர்!
- அவைத்தலைவீர்!
மேற்கோள்குறி வகைகள்
- மேற்கோள் குறி இரண்டு வகைப்படும். அவை,
- ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
- இரட்டை மேற்கோள் குறி ( “ “ )
ஒற்றை மேற்கோள் குறி
- ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.
ஒற்றை மேற்கோள் குறி எடுத்துக்காட்டுகள்
- ‘ஏ’ என்று ஏளனம் செய்தான். (தன்னை குறிக்கும் இடம்)
- பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார். (கட்டுரைப் பெயர் குறிப்பிடும் இடம்)
- ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும். (நூல் பெயர் குறிப்பிடப்படும் இடம்)
- ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்’ என்பர். (கூற்றுப்பகுதிகளை சுட்டுதல்)
இரட்டை மேற்கோள் குறி
- நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
- எடுத்துக்காட்டுகள்
- “நான் படிக்கிறேன்” என்றான்.
- “ஒழுக்கமுடைமை குடிமை” என்றார்.
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- சீறாப்புராணம்
- அகநானூறு
- பிம்பம்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- சான்றோர் சித்திரம் – இரசிகமணி தி கே சிதம்பரனார்
- 11TH TAMIL நிறுத்தக்குறிகள்
- 11TH TAMIL நிறுத்தக்குறிகள்
- 11TH TAMIL நிறுத்தக்குறிகள்
- 11TH TAMIL நிறுத்தக்குறிகள்
- காலத்தை வென்ற கலை
- ஆத்மாநாம் கவிதைகள்
- குற்றாலக் குறவஞ்சி
- திருச்சாழல்
- இசைத்தமிழர் இருவர்